அளவின்றி உண்ணோம் யாங்கள்;
அடிசிலைச் சமன்செய் துண்போம்;
களவில்லை நெஞ்சில் ஊணைக்
கருதியே வாழ்வ தில்லை;
இளைஞர்கள் இதைச்சொன் னாலும்
இவருடல் எடையால் வீங்கி
அளிகமும் நலமும் தேய்தல்
அனைவரும் அறிந்த தொன்றாம் .
பருத்தலோ பயனே இல்லை
பருகிடும் இன்பம் நீங்க
ஒருத்தரும் விழைவ தில்லை;
உண்மையும் இதுவே தானோ?
திருத்தம் மேற்கொள்வீர் இன்றே
தின்பதில் கொழுப்பு சீனி
நிறுத்தியே காணின் யாக்கை
நீங்குமோ நலம்சேர் வாழ்வே
வீங்கு வீக்கு !
அடிசிலைச் சமன்செய் துண்போம்;
களவில்லை நெஞ்சில் ஊணைக்
கருதியே வாழ்வ தில்லை;
இளைஞர்கள் இதைச்சொன் னாலும்
இவருடல் எடையால் வீங்கி
அளிகமும் நலமும் தேய்தல்
அனைவரும் அறிந்த தொன்றாம் .
பருத்தலோ பயனே இல்லை
பருகிடும் இன்பம் நீங்க
ஒருத்தரும் விழைவ தில்லை;
உண்மையும் இதுவே தானோ?
திருத்தம் மேற்கொள்வீர் இன்றே
தின்பதில் கொழுப்பு சீனி
நிறுத்தியே காணின் யாக்கை
நீங்குமோ நலம்சேர் வாழ்வே
வீங்கு வீக்கு !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.