பெற்றமகன் மனைவியிடம் வளர்ந்தால் என்ன
பின் தாயாம் தாய்ப்பின்னே பிதாவே என்றார்.
அற்றுறவு போமுன்னே அமைந்த வாழ்வில்
அன்பினொரு சின்னமென விளைந்த செல்வம்!.
உற்றுவிரி இறத்தான வழக்கு முற்றி
ஒருநிலையில் மனமின்றி மகனைக் கொன்றான்;
பற்றுவெறி ஆனதுவே புவியின் மேலே
பாவமிதைச் செய்திடவும் துணிகின்றானே
குறிப்புகள்: முன் இடுகைகளில் உள்ளன :
பின் தாய் > பிதா என்பது தாய்க்குப் பின் தந்தை என்ற பொருள்.
ஒற்றுக்கள் நீங்கிய சொல். திருப்பிப் போட்ட தமிழ்.
இரத்து - இறத்து இறு : முடிதல். து : விகுதி. அ : சாரியை. அற்று என்பது அத்து ஆனதெனினும் ஆம் .
உற்று = காதலுற்று; விரி = அது மணவாழ்வாக விரிந்து; இறத்து ஆன = மணவிலக்கு ஆகிவிட்ட ; வழக்கு : நீதிமன்ற வழக்கு; முற்றி : குழந்தை யாருக்கு என்ற நீட்சிப் போராட்டமாக முதிர்ந்து; இவற்றைச் சில சொற்களில் புகுத்தியுள்ளேன்,
ஒரு நிலையில் மனமின்றி = மனம் பேதலித்து;
Read news at http://www.chinapost.com.tw/asia/singapore/2016/08/02/474168/Belgian-who.htm

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.