அது தமிழ்,
இது தமிழில்லை என்று
சொல்லிக்கொண்டிருக்கும் மாலாவின்
பெயர்
தமிழில்லை (தமிழன்று)
என்று சில நல்லன்பர்கள்
கூறியுள்ளனர்.
அதனை
இப்போது ஆய்வு செய்யலாம்
செல்லாயி
என்பது செல்லமான ஆயி என்று
பொருள்படுவது. இக்காலத்தில்
இப்பெயர் நாகரிகமற்ற பெயராய்க்
கருதப்பட்டு யாரும்
வைத்துக்கொள்வதில்லை.
ஓர் ஆய்வாளிக்கு மனித
நாவிலிருந்து வெளிப்போதரும்
எந்தச் சொல்லும் நாகரிகம்
உள்ளதுமில்லை; இல்லாததுமில்லை.
சொல்லில் நாகரிகம்
இருப்பதாக நினைத்தல் மனிதனின்
மகிழ்வில் விளைந்த நினைப்பு.
சில மனிதர்கள் சில
ஒலிகளை விரும்புகிறார்கள்.
இது ஒரு மனப்பதிவு
அன்றி வேறில்லை.
ஆனால்
விரும்பாத ஒலியை நாம்
கட்டாயப்படுத்தி ஏற்கச்செய்தல்
இயலாத காரியம். நம்மைப்பொறுத்தவரை
குறித்த எல்லா ஒலிகளும் மனித
நாவில் விளைந்தவை.
செல்லாயி
என்பதைச் சுருக்கிச் செல்லா
என்றால் நன்றாக இருக்கிறது.
திடீர் நாகரிகம்
ஏற்பட்டுச் சிறந்துவிடுகிறது.
ஒரு சீனப்பெண்னிடமோ
மலாய்ப் பெண்ணிடமோ சொன்னால்
சிறிதாகவும் இனிதாகவும்
இருக்கிறது என்கிறார்கள்.
சிற்றூர்க்காரர்கள்
முயற்சிச் சிக்கனத்தின் காரணமாகச்
செல்லா என்றனர். இப்படித்
திரிந்த பெயர்களின் பட்டியல்
நீளமானது.
எல்லாவற்றையும்
எழுதிக்கொண்டிருந்தால்
அலுப்பு ஏற்படும்,
இலக்கணப்படி
செல்லாயி செல்லா என்றானது
கடைக்குறை.
இங்ஙனமே
மீனாய்ச்சி அல்லது மீனாயி
என்பது மீனா என்றானதும்
கடைக்குறை. மீனாட்சி என்பது ஆட்சியைக் குறிக்கிறது.
ஆகுபெயராய்ப் பெண்ணையும் தேவியையும் குறிக்கும்.
இதுவேபோல்
மாலாய்ச்சி அல்லது மாலாயி
என்பது மாலா என்றானால்
கடைக்குறை.
மால் மாலன்
மால் மாலி
மால்
மாலினி\
மால் மாலவன்
மால் மாலதி
மால் மாலை
மால் மாலு.
மால் மாலியை
மால்யா ( மால் ஆயா என்பதன் திரிபு .)
மால் மாலிகை
எனப்பற்பல
வடிவங்கள்.
இந்த
வடிவங்களைப் படைத்தவர்கள்
மனிதர்களே. நாமே
மாலுதலாவது
கலத்தல். இருளும்
ஒளியும் கலந்த நேரம் மாலை
நேரம்.
மால் :
மாலை. மால்
: கரியமால் எனவும்
படும், பல பூக்கள்
கலக்கத் தொடுத்தது மாலை,
மால் ஒளி குறைந்த
நிறம். மால் >
மா , மா
நிறம்.
மாலினி,
மாலா என்பன கருத்தவள்
என்று பொருள்பட்டுக் காளியைக்
குறிக்கும், அம்மனை
அறிவுறுத்தும்.
மால் ஆயி
: மால் அல்லது கருவல்
ஆனவள் எனினுமாம்.
மாலும் என் நெஞ்சு ; மாலானவர் அணி பொன்னாடை; தொடர்கள் காண்க
மாலு
என்பவள் என் தோழி. இவள்
கேரளாவில் வக்கத்தில் உள்ளவள்.
விகுதிகள்
வேறுபட்டன; திரிந்தன.
மா:
மாயி: கருப்பன். ( மா + இ .)
மாயம்> மாயி எனினும் அமையும். மாயம் செய்வோன் என்னும் பொருளில்,
மாயம்> மாயி எனினும் அமையும். மாயம் செய்வோன் என்னும் பொருளில்,
.மற்றவை பின்னர் காண்போம்,
இங்கு தென்பட்ட சில பிழைகள் திருத்தப்பட்டன. 8.22 இரவு 1.12..2017
மறுபார்வை செய்யப்படும்.
இங்கு தென்பட்ட சில பிழைகள் திருத்தப்பட்டன. 8.22 இரவு 1.12..2017
மறுபார்வை செய்யப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.