சாய்த்தல் : https://sivamaalaa.blogspot.sg/2014/03/blog-post_23.html. சாத்தியம் என்பதை ஆய்ந்துகொண்டு பின்பு வாயித்தல் ( அதாவது வாசித்தல் , ) நலம் .
மரம் விழுந்து செத்தவர்களின் கதைகளைச் சேர்த்துத்தந்து மூளையைச் சுண்டிய இணையத்தைப் போல் தாளிகைகளால் செயல்புரிதல் அரிது.
சாய் என்றாலே ஆற்றல். அது மரம் சாய்க்கும் ஆற்றல். பின்னர் அது பொதுப்பொருளில் வழங்கி, ஆற்றல் என்று மட்டும் நின்றது. பேராற்றல் என்று மனத்தில் பதிவுறுத்தப் ' பெருஞ்சாய்' என்றனர்.. இந்தச் சொல் இன்னும் நம்மிடம் உள்ளது. பேச்சில் அடிக்கடி கேட்க முடியாமற் போனாலும் நிகண்டுகள் கைவிட்டுவிடவில்லை. அதுவரை நன்மையே நிலைப்பட்டது.
சாய்த்தல் > சாய்த்தியம் > சாத்தியம்.
ஓலைச்சுவடிகள் இல்லாமல் வாய்மொழியாகவே பாடம் சொன்னவர்:
வாய் > வாய்த்தி > வாத்தி > வாத்தியார் ஆனால், இரண்டில் ஒரு பொட்டு (யகர ஒற்றெழுத்து அல்லது மெய்) அவர் வைத்துக்கொள்வதில்லையே. இறுதியில் வரும் "ஆர் " பணிவுப் பன்மை .
பாய்ச்சு > பாய்ச்சனம் > பாசனம் என்பதற்கு இரண்டு பொட்டும் இல்லாமல் போனதால், இப்போது அடிக்கடி தண்ணீர்ப் பஞ்சமோ?
will edit. Part of the post was unexpectedly destroyed.
மரங்கள் அடர்ந்த காடுகளில் சுற்றி வேலை பார்ப்பவர்களுக்கு மரங்களைச் சாய்ப்பது ஒரு பெரிய வேலை. சாய்க்க முனைபவரின் பக்கமே சாய்ந்து அம்மரம் அவரைக் கொன்றுவிட்டால் அது பெருந்துன்பக் கதையாகிவிடும். இப்படிச் சில நிகழ்வுகள் ஏற்பட்டு அவை தாளிகைகளில் வந்தன; அவை கண்டு, சாய்த்தல் என்பதன் பொருளை யாமும் உணர்ந்தோம். அதுவரை " இவன் என்ன சாய்த்துவிட்டான்?" என்ற கேள்வியின் உண்மைப் பளு மேலோட்டமாக நின்று, அப்போதுதான் விரிந்தது, புரிந்தது. எங்கள் வீட்டில் ஒரு மரத்தை வெட்டவேண்டி ஏற்பட்டபோது, மரம்வெட்டுத் துறையில் வல்லோரையே அழைத்தோம். வீட்டிலோ பக்கத்திலோ உள்ள தெரியாத பையன்களிடம் பத்து வெள்ளியைக் கொடுத்துச் சாதித்துவிடலாம் என்பது அறிவுடைமை ஆகாது.
மரம் விழுந்து செத்தவர்களின் கதைகளைச் சேர்த்துத்தந்து மூளையைச் சுண்டிய இணையத்தைப் போல் தாளிகைகளால் செயல்புரிதல் அரிது.
சாய் என்றாலே ஆற்றல். அது மரம் சாய்க்கும் ஆற்றல். பின்னர் அது பொதுப்பொருளில் வழங்கி, ஆற்றல் என்று மட்டும் நின்றது. பேராற்றல் என்று மனத்தில் பதிவுறுத்தப் ' பெருஞ்சாய்' என்றனர்.. இந்தச் சொல் இன்னும் நம்மிடம் உள்ளது. பேச்சில் அடிக்கடி கேட்க முடியாமற் போனாலும் நிகண்டுகள் கைவிட்டுவிடவில்லை. அதுவரை நன்மையே நிலைப்பட்டது.
சாய்த்தல் > சாய்த்தியம் > சாத்தியம்.
ஓலைச்சுவடிகள் இல்லாமல் வாய்மொழியாகவே பாடம் சொன்னவர்:
வாய் > வாய்த்தி > வாத்தி > வாத்தியார் ஆனால், இரண்டில் ஒரு பொட்டு (யகர ஒற்றெழுத்து அல்லது மெய்) அவர் வைத்துக்கொள்வதில்லையே. இறுதியில் வரும் "ஆர் " பணிவுப் பன்மை .
பாய்ச்சு > பாய்ச்சனம் > பாசனம் என்பதற்கு இரண்டு பொட்டும் இல்லாமல் போனதால், இப்போது அடிக்கடி தண்ணீர்ப் பஞ்சமோ?
மெய்யெழுத்துக்கள் நீக்கி எழுதும் இயக்கம் ஒரு காலத்தில் மும்முரமாக இருந்தது. அடிக்கடி பொட்டு அல்லது குத்துப் போட்டால் ஓலை கிழிந்து இடர் ஏற்படுகிறது. கல் மற்றும் ஓடுகளில் எழுதும் போதும் தேவையற்ற உடைப்புகள் அல்லது சில்கள் வெளிப்படும். மெய்களை ஒலிக்கக் கூடுதல் முயற்சி வேறு தேவைப்படுகிறதே........
will edit. Part of the post was unexpectedly destroyed.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.