தென்சீனக் கடலினிலே தீவுகளும் திட்டுகளும்
தெள்ளொளியில் திண்மைதரு குணக்கிலெழு சீனநாடு
வன்மையுடன் அவைதிருத்தி வளமுறுத்தி உரிமைபெற
வழக்கநிலை மாறுகொள வழங்கியபல் நடபடிகள்.
எல்லாமும் பிழைதோன்ற ஏலாத நிகழ்த்தினமை
எதிர்வந்த தீர்ப்பதனால் புதிர்நீங்கப் புரட்டிவிட
சொல்லாலே படுசினமாம்! சூடான முட்டுரைகள்
சூழுலகம் இவைகண்டு சோராமை காத்திருக்கும்.
சட்டப்படி வருதகவுச் சாய்தலிலாத் தீர்ப்புரையை
முட்டிமுகம் சுளிக்காமல் ஒட்டிவரின் விரிநெஞ்சம்;
குட்டியொப்ப முரண்டியற்றிக் குறுமைசெயல் தவிர்த்திடுதல்
முற்றுவளர் நெறிசெலவே முயன்றிடுதல் மூதறிவே.
வன்மை : வலிமை
குணக்கு : கிழக்கு.
நடபடிகள் : செயல்பாடுகள்
ஏலாத : ஏற்றுக்கொள்ள இயலாதவை
முட்டுரைகள் : statements of rejection against the tribunal
சாய்தலிலா: non-partisan
விரி நெஞ்சம் : magnanimous
குட்டியொப்ப : இளமையில் தெளிவின்மை போல
மூதறிவே: maturity
சீனாவுக்கு எதிரான தீர்ப்பு
வன்மை : வலிமை
குணக்கு : கிழக்கு.
நடபடிகள் : செயல்பாடுகள்
ஏலாத : ஏற்றுக்கொள்ள இயலாதவை
முட்டுரைகள் : statements of rejection against the tribunal
சாய்தலிலா: non-partisan
விரி நெஞ்சம் : magnanimous
குட்டியொப்ப : இளமையில் தெளிவின்மை போல
மூதறிவே: maturity
சீனாவுக்கு எதிரான தீர்ப்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.