பன்னிரண்டு மணிநேரம் பகலவன் ஒளிப்புனலில்
பயின்றவெலாம் மறந்திருந்தேன்;
என்னிரண்டு விழிகளும் இறைஞ்சிய போதெல்லாம்
இருந்தநிழல் விருந்துமுண்டேன்;
அன்னியமோ கதிரவனே அன்னியமோ வெண்ணிலவே
அன்னியமோ உடுக்களெல்லாம்
பொன்னிறமே பட்டொளிரும் எழிலியொடு தென்றலுமே
மன்னுயிர்க்கெல் லாமினிமையே.
கதிரோனும் மறைந்திட்டான் கவிமெல்ல இனிப்பாடு
காதுணவு விழைகின்றன;
மதிதானும் மாருதமும் மலர்களிலே வண்டினமும்
மருவினிய மாலையழகில்!
இதுநாளில் யான்பெற்ற இன்பங்கள் யாவுமினி
என்றென்றும் எனதுமாகும்
மெதுவாக எழுந்திந்த இடம்நீங்கு வேன்விரைவும்
உதவாத இசைந்தநாளே.
வெயில் விழைவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.