ஒருவர் இறந்துவிட்டால் . அவர்தம் உடலைச் சிலர் வீட்டுக்குள் வைத்து வேண்டியவற்றைச் செய்கிறார்கள்.
வேறு சிலர் வீட்டுக்கு வெளியில் பந்தல் போட்டு அங்கு கிடத்தி வைக்கிறார்கள் .
சிலர் வீட்டுமுன் பந்தல் போட்டாலும், பிணத்தை வீட்டிலேயே வைத்து, பந்தலில் வந்தவர்கள் அமர்ந்திருக்க வழி செய்வர் .
இங்குச் சீனர்கள் பிணத்தை வெளிப் பந்தலில்தான் வைத்து, சடங்குகளைச் செய்கிறார்கள்.
இந்தியாவில் எந்த இடம் எந்த வகுப்பினர் என்பதைப் பொறுத்து இருவிதமாகவும் நடைபெறுவதும் உண்டு என்று தெரிகிறது.
சென்ற நூற்றாண்டிலோ அதற்கு முன்போ இருந்த பழக்க வழக்கங்கள்
இந்த நூற்றாண்டில் மாறியிருக்கலாம் . ஆகையால் இப்போது நீங்கள்
கடைப்பிடிப்பது நீங்கள் பழமை என்று நினைக்கும் ஒரு புதுமையாய்
இருக்கக் கூடும் . நம்மனோர் இதை எல்லாம் எங்கே எழுதிவைத்தனர்?
இருந்தால் இலக்கியங்களிலிருந்து சலித்து எடுக்கலாம். இல்லாவிட்டால்
வெள்ளைக்காரன் எழுதிவைத்ததைப் படிக்கலாம். இது நிற்க:
சாவு ஒரு தீட்டு. அதை ஒதுக்கமாகக் கவனிக்கவேண்டும். மனத்தாலும் செயலாலும் புறத்தே வைக்கவேண்டும் என்பது பொதுவாகத் தமிழர் கொள்கை எனில் அது தவறாகாது என்று நினைக்கிறோம் . நேரம் ஆகிறது, சீக்கிரமாக எடுங்கள் என்று உறவினர் கூவுவதையும் கேட்டிருக்கலாம்.
இவற்றைத் தவறு என்று சொல்லவில்லை. நிலைமை அப்படி .
இவனுக்கு இன்னும் கேடு வராமல் உலவிக் கொண்டிருக்கிறானே என்று சொல்லும் வசையில் கேடு என்பது சாவையே குறித்தது.
ஏதம் என்பது கேடு. பிணம் ஒரு ஏதம் . பிணம் புறத்தே கிடத்த வேண்டிய ஏதம். அப்படியா?
புற ஏதம் > பிரேதம் ஆகிறது. புலியைப் பிலி என்று சொல்லும் பேச்சுத் தமிழர் அமைத்த திரிபு. ஏதம் என்பது இப்போது பேச்சு வழக்கில் மறைந்தது.
ஆங்கிலமும் பிறவும் அனைத்துத் துறைகளிலும் ஊடுருவி விட்ட இற்றை நாளில் புறமும் ஏதமும் தாக்குப் பிடிக்குமோ?
Paragraphs: justification fault inherent in this editor. We have tried but it could not be corrected.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.