பண்டைக் காலத்தில் சொல் அமைத்தவர்கள் பல வழிகளைக் கையாண்டார்கள். அவற்றுள் ஒன்று:
முதலில் அமைத்தற்குரிய சொல்லின் கருத்தை ஒரு வாக்கியமாக எழுதிக்கொள்ளவேண்டும்.
இதற்கு "முகாந்திரம் " என்பதையே எடுத்துக்கொள்வோம்.
வாக்கியம் : முகம் ஆகும் திறம்.
1. ஆகும் என்பது ஆம் என்று குறையும்.
எனவே முகம் ஆம் திறம்./
2. பின் முகம் என்பது முக என்று மகர ஒற்றை இழக்கும்,
எனவே முக ஆம் திறம் . ஆகிறது.
3. இப்போது சொல் துண்டுகள் புணர்த்தப் படுகின்றன .
எவனே முகாந்திறம் ஆகிறது.
4. இனி திறம் என்பதை வெறும் பின்னொட்டு ஆக்கவேண்டும். இதற்கு றகரத்தை ரகரம் ஆக்குக.
எனவே இப்போது "முகாந்திரம் " ஆகிறது.
திறம் என்பது திரம் ஆக்கப்பட்டு, வெறும் பின்னொட்டு ஆகிவிட்டால், சொல்லின் அடிப்படைகளை நன்கு மறைத்துவிடலாம். ஒவ்வொரு சொல்லுக்கும் அதன் வரலாற்றை அதைப் பயன்படுத்துவோன் தெரிந்திருக்க வேண்டியதில்லை . சொற்களின் வரலாறுகளை நினைவுபடுத்திக்கொண்டிருந்தால் ஒருவேளை பயன்பாட்டில் மனத் தடையுணர்ச்சி ஏற்படலாம்.
எ-டு : வேதம் என்ற சொல்.வித் ( விடய அறிவு ) என்பதிலிருந்து வந்தது என்று கொண்டால், அது இறைப்பற்று சார்ந்த நூல் அன்று என்று எண்ணத் தோன்றுமே..அது தவறன்றோ ? இதை அற்றம் ஏற்படின் விளக்குவோம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.