தக்காளி
-----------
தகத்தக என்று சிவப்பாகவும் இளஞ்சிவப்பாகவும் இருந்து கண்கவர் காட்சியைத் தருவது தக்காளிப் பழக்குவியல். இதைக் கண்ட தமிழன், தக என்ற சொல்லினின்று தக்காளி என்ற சொல்லை அமைத்தான்.
தக > தக+ ஆளி = தக்காளி.
தகுந்த சத்தினை உடலுக்குத் தருவது தக்காளி.
தகு+ ஆளி = தக்காளி எனினுமாகும்.
ஆக இது இருபொருத்தமுடைய இருபிறப்பி ஆகும்.
ஆளி, என்பதில் ஆள்+ இ என்ற இரு துண்டுகள் உள.
தகத்தக என்ற நிறத்தை ஆள்வது என்ற பொருளும், உடலுக்கு ஊட்டத்தினை மேலோங்கச் செய்வது என்னும்
பொருளும் உளது. இ என்பது விகுதியாகும்.
மக என்ற சொல் மக்கள் என்று புணர்ச்சியில் திரிந்தது கருதத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.