http://www.usatoday.com/story/news/nation/2016/05/03/new-mexico-girl-killing-arrest/83906060/
சிறுவர் சிறுமியர்க்குச் சீருடன்பார் மீதில்
நிறுவிய நல்வாழ்வு நேர --- உருவிய
வாள்கொடு பின்செல்ல வேண்டுமோ இன்றெனில்
மாள்நெறி மன்னுமோ தான்.
பிள்ளை கடத்திப் பிழைச்செயல் செய்வாரை
அள்ளியே கம்பி அறைக்குளிட்டு ---- உள்ளுக!
நல்லன நாடிடுக! நாளைக்குள் நேர்செலென்
றொல்லும்வாய் ஓங்கிச் செயல்.
பெற்றோர் கதறவே பிள்ளையைக் கொன்றானை
மற்றோர் கணமுமே தப்பாமல் ---தெற்றின்றி
மன்றிலே தீர்ப்பளித்து மாலுதல் நீக்கியே
கொன்றொறுக்கக் கூடா கொலை.
வாள் கொடு = வாளை எடுத்துக்கொண்டு
மாள் நெறி = மரணத்தில் முடிதல்
ஒல்லும் வாய் = இயன்றவரை
தெற்றின்றி = தவறுகள் இல்லாமல்
மாலுதல் = மயக்கம் , ஐயப்பாடு
கொன்றொறுக்க = மரண தண்டனை விதிக்க;
கூடா = அதிகம் ஆக மாட்டா. (கொலை கூடா )
சிறுவர் சிறுமியர்க்குச் சீருடன்பார் மீதில்
நிறுவிய நல்வாழ்வு நேர --- உருவிய
வாள்கொடு பின்செல்ல வேண்டுமோ இன்றெனில்
மாள்நெறி மன்னுமோ தான்.
பிள்ளை கடத்திப் பிழைச்செயல் செய்வாரை
அள்ளியே கம்பி அறைக்குளிட்டு ---- உள்ளுக!
நல்லன நாடிடுக! நாளைக்குள் நேர்செலென்
றொல்லும்வாய் ஓங்கிச் செயல்.
பெற்றோர் கதறவே பிள்ளையைக் கொன்றானை
மற்றோர் கணமுமே தப்பாமல் ---தெற்றின்றி
மன்றிலே தீர்ப்பளித்து மாலுதல் நீக்கியே
கொன்றொறுக்கக் கூடா கொலை.
வாள் கொடு = வாளை எடுத்துக்கொண்டு
மாள் நெறி = மரணத்தில் முடிதல்
ஒல்லும் வாய் = இயன்றவரை
தெற்றின்றி = தவறுகள் இல்லாமல்
மாலுதல் = மயக்கம் , ஐயப்பாடு
கொன்றொறுக்க = மரண தண்டனை விதிக்க;
கூடா = அதிகம் ஆக மாட்டா. (கொலை கூடா )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.