ஆரவாரம் இல்லாது சேர்த்த வெற்றி
அடுக்கினவர் அழகுசெய உலகு ஒபாமா!;
ஊருகூறும் ஒற்றுமையை உலகி யைபை
ஒதுக்காமல் யாவரையும் அணைத்துச் சென்றார்
பேருவர வேண்டுமென்ற நோக்கம் தோய்ந்த
பெரும்போர்கள் எவற்றையுமே துவக்கி னாரோ?
சேறுறுருவும் பொருளியல்சேர் குழப்பம் ஏழ்மை
சேராமல் தம் நாட்டைக் காத்த மேதை.
ஒசாமாவை ஒழித்தவராம் ஒபாமா ஓயார்
ஒன்றொன்றாய்த் தீயாரை ஒடித்துப் போட்டார்!
திசாபுத்தித் திறமென்பார் கணியர் ! ஆயின்
தேர்ந்ததொரு மூளைப் பலம்: தெரிவார் சொல்வார்.
அசாவாமை அவர் அரசின் இயக்க வேராம்
அழிகூத்தும் இழிகொலையும் இல்லா ஓட்டம்
கசாகூலம் ஆகிவிட்ட காய்கள் ஆளும்
காருலகில் ஏறொளிசேர் கனியாம் செம்மல்.
எட்டாண்டு வரம்புக்குள் ஏய நின்றே
இயல்வதெலாம் முடித்திட்டார் இறங்கும் நேரம்
கட்டான அரசியற்றிக் கருத்தின் கோடு
கைவரவும் பெற்றவரிக் காலம் தோன்றும்
முட்டான கழிவுகளும் மூடம் தானும்
முனைவாரை மட்டுறுத்தி மெட்டுப் பாடித்
தட்டாமல் தம்வழிக்குள் இட்டுஒ பாமா
தமக்கெளிதே இமையமெனும் தலைமைச் செல்வம்.
சில அருஞ்சொற்கள்: மற்றும் குறிப்புகள்
வெற்றி அடுக்கினவர் - வெற்றிகள் பல பெற்றவர்
அழகு செய உலகு ஒபாமா: இதனை ஒபாமா உலகை அழகு செய என்று திருப்புக .
உலகை அழகுசெய்ய ஒபாமா பல வெற்றிகளை அடுக்கினார் என்று உரை நடைப் படுத்தவேண்டும்.
உலகு அழகு செய்ய வேண்டின் எல்லா இன்னல் இடர்களையும் அகற்றுவதில் வெற்றிகளை அடுக்கி ஆகவேண்டும்.
எதற்கு எது அழகு என்று பழ நூல்கள் கூறுமே. எ-டு : உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு என்று சொல்வது காண்க.
" அடுக்கினவர் ./ அழகுசெய / உலகொ / பாமா " என்று இசைக்க.
இயற்பெயரைப் புணர்த்தி எழுதவில்லை.சரியாக வாசிக்கவும் .
திசாபுத்தி - கிரகங்கள் இயங்குதல் .
கணியர் - சோதிடர்.
அசாவாமை --- அசந்து போகாமை; தளராமை.
அழிகூத்து - உலகை அழிக்கும் செயல்கள்
இழிகொலைகள் - ஒன்றும் அறியாரை வெடிவைத்துக் கொல்லுதல்
கசாகூலம் - குப்பை; குழப்படி .
காய்கள் - முதிர்ச்சி இல்லாத் தலைவர்கள்.
கனியாம் - பழுத்தவர் ஆனவர் (பட்டறிவு/ அனுபவம் பெற்றார் )
காருலகில் - இருண்ட உலகில்.
ஏறொளி சேர் - போகப்போக ஒளி மிகுந்துவரும்;
சேறுறுருவும் பொருளியல்சேர் குழப்பம் ஏழ்மை - சேறு போல ஊடுருவும் குழப்பம் உடைய ஏழ்மை கலந்த பொருளீயல் //நாட்டைக் கெடுத்துவிடாமல் காத்த என்று இயைக்க .
ஓட்டம் : இது அரசு நடத்திச் செல்லுதல் குறிப்பது.
ஏய - பொருந்த.
இறங்கும் - பதவிக் காலம் முடியும்;
கட்டான - கட்டுப்பாடு உடைய ;
கோடு - உச்சி;
கைவரவும் பெற்றவரிக் காலம் தோன்றும் - கைவரவும் பெற்றவர் இக்காலம் தோன்றும் .
முட்டான - முட்டுக் கட்டைகள் ஆன
மட்டுறுத்தும் - வரம்புக்குள் வைத்திருக்கும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.