இது தேர்தல் பருவகாலம் (சீசன்) ஆதலால் தேர்தல் ஆரூடங்கள் பல அவ்வப்போது வெளிவந்துகொண்டிருக்கின்றன. அவற்றை அறிந்துகொள்ள மக்கள் முந்தவே தாளிகைகளும் போட்டிபோட்டுக்கொண்டு ஆருடங்களை அச்சேற்றியவண்ணமிருக்கின்றன.
அதனால் ஆரூடம் என்ற சொல்லை ஆராய்தல் நன்று.
ஆர்தல் - நிறைதல்.
வளமார் தமிழ் - வளம் ஆர் தமிழ் - வளம் நிறைந்த தமிழ்.
எழிலார் நங்கை = எழில் நிறைந்த நங்கை.
ஊடம் என்ற சொல்தான் உங்களுக்குத் தெரிந்திருக்கவேண்டுமே.
ஊடு = ஒன்றில் உட்புகுந்து செல்லுதல்.
ஊடு+ உருவுதல்: = ஒன்றில் உட்புகுந்து மறுபக்கம் தோன்றுதல். வெளிப்படுதல். ஊடுருவுதல்.
ஊடகம் என்ற சொல் : ஊடு+அகம். பல விடயங்களிலும் புகுந்து செய்தி சேகரிப்பவர்கள்.
ஊடு+ அம் = ஊடம் (எதிர்கால விடயங்களில் புகுதல்.)
இதிற் புகாவிடில் நிறைவு இல்லை. புகுந்து ஆய்ந்து சொன்னாலே நிறைவு. இதுதான் ஆர் என்ற சொல் நமக்குத் தெரிவிக்கிறது.
ஆர் + ஊடம் = ஆரூடம்.
இதைச் சில ஆண்டிகளில் முன் வெளியிட்டிருந்தேன். வெளியிட்ட வலைத்தளம் இப்போது மூடப்பட்டுவிட்டது
இ தன் படியைத் தேடிக்கொண்டிராமல், இதைப் படித்து
இன்புறவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.