இப்போது சிவஞான போதத்தின் எட்டாம் சூத்திரத்தையும் சூத்திரத்தின் பொருளையும் நோக்குவோம். பின்னர் சற்று விரிவாக உணர்ந்து கொள்வோம்.
நூற்பா இது:
ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்து எனத்
தம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்த விட்டு
அன்னியம் இன்மையின் அரன்கழல் செலுமே.
ஐம்புல வேடரின் - மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து புலன்களாகிய வேட்டையாடுநரின் ;
அயர்ந்தனை வளர்ந்து என - ஒருங்கு இணைந்த தொடர் இயக்கத்தினால் சொந்த வடிவத்தையும் அதன்கண் உள்ள ஆன்மாவினையும் உணராமல் மயங்கி, என்றபடியாக ;
தம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்த - தமது முன் நிற்கும் ஆசிரியனாய்த் தவநிலையில் நின்று தனக்குச் சிறப்பு அறிவு புகட்டவே;
விட்டு - அவ் அறியாமையைக் களைந்து;
அன்னியம் இன்மையின் ---சிவம் தன்னின் வேறானது அன்றென்னும் ஞானம் அடைந்ததனால் ;
அரன்கழல் செலுமே. - சிவத்துடன் ஒன்றுபடுவதாகும். ( சிவத்தின் திருவடிகளிற் புகும் இறுதியுறுதி அடையும் )
சிவத்துட் செல்லும் என்பது கவி நயத்துடன் அரன்கழல் செலுமே எனப்பட்டது.
அன்னியம் என்பது முன் இவ் வலைப்பூவில் விளக்கப்பட்டுள்ளது. அங்குக் காண்க, மற்றும் https://bishyamala.wordpress.com/2016/04/04/376/ என்ற வலைப்பூவிலும் காணலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.