எப்போதும் வீட்டில் இலாததினால் ---- பின்னால்
எலிகள் புகுந்து வி- ளையாடியே .
ஒப்பாத நாசங்கள் செய்தகதை ---- நான்
உரைத்திடில் கேட்டே இரங்குவிரோ!
அடுப்பினில் வாயுக் குழாய்தனையே---- கடித்தே
அங்குமிங் கும்சிதறச் செய்ததனால்
கடுப்பினில் கம்பால் அடித்துத் துரத்துதல்
கால மனைத்திலும் பின்வருமோ?
மரத்துக் கதவினில் கை நுழைக்கும் ---- படி
மலைத்துக் குலைந்திட ஓர் துளையே
அடைத்ததைச் சீர் செய ஐம்பது வெள்ளிகள்
ஆங்கவற் றோடிணை சேர்துயரே!
பாவம் பணிப்பெண் உழைப்பு மிகுந்தது
பண்ணினள் தூய்மை அவட்குநன்றி
ஏவும் அணியில் எலியும் இணைந்திடில்
என்னசெய் வாள் இதை எங்க்குசொல்வோம் ?
எலிகள் புகுந்து வி- ளையாடியே .
ஒப்பாத நாசங்கள் செய்தகதை ---- நான்
உரைத்திடில் கேட்டே இரங்குவிரோ!
அடுப்பினில் வாயுக் குழாய்தனையே---- கடித்தே
அங்குமிங் கும்சிதறச் செய்ததனால்
கடுப்பினில் கம்பால் அடித்துத் துரத்துதல்
கால மனைத்திலும் பின்வருமோ?
மரத்துக் கதவினில் கை நுழைக்கும் ---- படி
மலைத்துக் குலைந்திட ஓர் துளையே
அடைத்ததைச் சீர் செய ஐம்பது வெள்ளிகள்
ஆங்கவற் றோடிணை சேர்துயரே!
பாவம் பணிப்பெண் உழைப்பு மிகுந்தது
பண்ணினள் தூய்மை அவட்குநன்றி
ஏவும் அணியில் எலியும் இணைந்திடில்
என்னசெய் வாள் இதை எங்க்குசொல்வோம் ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.