புல்லுதல் அல்லது
"புல்" என்பதொரு வேர்ச்சொல். யாம்
வேர்ச்சொல் என்று குறிப்பது, சில
பல அடிச்சொற்களைப் பிறப்பிக்க வல்ல தாய்ச்சொல்.
புல் என்பதிலிருந்து புரு, பொரு என்ற
சொல்லடிகள் எழுந்தன.
புல்
> பொரு.
புல்
> புரு.
இந்த இரண்டை மட்டும் இன்று
ஆய்வோம். பலவற்றையும்
கொண்டுவந்தால் வாசிப்போரில் சிலர் குழப்பம் அடையக்கூடும்.
-து என்பது வினையாக்க விகுதியாகவும்
வரும்.
பொரு
> பொருந்து.
பொரு
> பொருத்து (பிறவினை).
இன்னோர்
உதாரணம் : திருந்து, திருத்து
என்பன.
புரு என்பதும் இங்ஙனமே ஒரு விகுதி
பெறும். (டு)
புரு
> புருடு.
டு என்பது ஒரு சொல்லாக்க
விகுதியே. கரடு, முரடு,
திருடு, வருடு
நெருடு
என வினை பெயர் இரண்டிலும்
இது வரும் சொற்கள் பலவாகும்.
புருடு என்பதன்மேல் அன் விகுதி ஏறி, புருடன் ஆயிற்று.
பேச்சு வழக்கில் புரு> புருசு > புருசன் என்று அமைந்தது.
புருசன் / புருடன் > புருஷ என்றானது.
புரு என்பது பொருந்து என்னும் பொருளது ஆதலின், புருடன் என்பவன்
பெண்ணுடன் பொருந்தி வாழ்பவன் என்று பொருள் தருவதாயிற்று
.
புரு> புருவு > புருவம்.
இச்சொல்லும் புரு என்பதினின்றே பிறந்ததாதலின், புருடன் கண்ணாகிய பெண்ணுடன் பொருந்திய புருவம் போன்றவன் அவளைக் காப்பவன் என்ற பொருள் கொள்ளுதல் ஏற்புடைத்தே. அங்ஙனமாயின், கணவன் கண்ணாக இருந்த நிலை மாறி (எது முதலில் படைக்கப்பட்ட சொல் என்பது ஆய்தற்கு உரியது) இச்சொல்லில் புருவமாக உணர்த்தப்பெறுகிறான் எனலாம். இது பெண்ணியத்துக்கு ஏற்ற கருத்து ஆகும்.
An error occurred and no preview and edit are possible Will edit later
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.