விடக்குண்ணும் ஆசையினால் இடக்கினிலே மாட்டி
விட்டிடுதல் நன்றாமோ வீணாய் நும் உயிரை?
தடைக்கற்கள் யாதுமிலை தகுசைவப் பாதை
தரணியிலே மேற்கொள்ள! தனுவிலுயிர் நிலவும்
இடைக்காலம் இன்பமுடன் எழில்பெறுகை வேண்டும்!
இதற்கான பயிற்சிசெயல் இன்னாஊண் விலக்கல்
கடைக்காலம் தள்ளிவைத்தல் கண்டுணர்க யாண்டும்
கசடிறவிப் பயம்நீங்கிக் கனிந்தகவை இலக்கே .
Hope with this help below you can decipher the poem.Also learn some new words.
விடக்கு : ஊன். இறைச்சி.
இடக்கு : துன்பம். இடர்.
தகு : தகுந்த,
தனு: தன் உடல். த = தன்; உ = உடல்.
இன்னா ஊண் = துன்பம் தரும் உணவு வகைகள்.
கடைக்காலம் : மரண காலம்.
யாண்டும் : எக்காலத்தும்.
கசடிறவிப் பயம் : மரணம் பயக்கும் கசடு. அல்லது மரண பயமாகிய கசடு, கசடு: குற்றம். இறவி = மரணம்.
கனிந்தகவை : கனிந்த அகவை. பழுத்த வயது.
இலக்கு : அடையவேண்டியது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.