http://sivamaalaa.blogspot.sg/2016/02/6.html இங்கிருந்து தொடர்வோம்.
ஆறாம் பாடலை இங்கு நினைவு கூர்வோம்:
சிவஞானபோதம் 6ம் பாடல் பொருளுரை
மன்னுலகு = இவ்வுலகத்துள் வாழ் மெய்யறிஞர்கள்; பெரியோர் ,
உணர் உருவெனின் = சுட்டி அறியத்தக்க வெளிப்பாடாயின்;
அசத்து = ( சிவமானது ) அது இவ்வுலகமே என்று கூறுவார்கள்.
உணராதெனின் = உணரப் படாததென்றால் அதாவது சுட்டி
அறியத்தக்க பொருளன்று சிவம் என்று கூறுவார்களாயின்;
இன்மையின் = அச் சிவமானது சூன்யம் என்று கூறுவார்கள்;
இரு திறன் அல்லது = இவ்விரண்டும் சிவம் அன்று.
அதாவது உலகமும் சிவம் அன்று; இன்மை எனும் சூன்யமும் சிவம் அன்று.
இரண்டு வகையின் இசைக்கும் = இப்படி இரண்டு விதமாக
சிவத்தை அறிய ஏதுக்களைக் கூறுவார்கள் என்றபடி.
எதையாவது சுட்டிக்காட்டி ஒருவற்குச் சிவத்தை அறிவிக்க வேண்டுமாயின் என்ன செய்யலாம்? வேறுவழியில்லை. இவ்வுலகத்தைக் காட்டவேண்டும். உலகத்தைப் பார்,உலகம் இருக்கிறது; ஆகவே சிவம் உண்டு என்று அறிக எனலாம். ஆனால்
அதன்காரணமாக உலகமே சிவம் ஆகிவிடாது; உலகம் வேறு; சிவம் வேறு. ஆகவே உலகம் அசத்து என்போம். உலகத்தைச் சுட்டலாம் ஆனால் அதுவே சிவம் அன்று.
உலகத்தைக் காட்டாமல் இன்மையைச் சுட்டலாம். படைத்தனவன்றி வேறொன்றுமற்ற அகண்ட ஆகாய வெளியின் சூன்யத்தைச் சுட்டலாம்; ஆனால் அதுவும் அசத்து அன்றோ? சிவத்தை அறிய அது ஒரு காரணமன்றி அதுவே சிவம் ஆகிவிடாது.
உலகமும் சடப்பொருள்; இன்மையும் சடப்பொருள். ஆகவே சிவமன்று, இரண்டும் அசத்து; சிவமே சத்து என்பதாம்.
1சத்து: இதை சத் சித் ஆனந்தம்; சச்சிதானந்தம் என்பர். உலகிற்கும் இன்மைக்கும் விலட்சணமாய் அதாவது விலக்கணமாய்; விலக்குண்டு தனியே நிற்பதான சிவமாகிய ஒருமையாம். அதற்கு நிகர் அதுவே. அதையறியப் பிற பொருள்கள் உதவலாமே அன்றி அவை அது ஆகிவிடமாட்டா ,.
விலக்கணம் விலட்சணம் இவற்றின் விளக்கம் இங்கு அறிக: http://sivamaalaa.blogspot.sg/2016/02/blog-post_26.html
உணராதெனின் : உணராததெனின் என்று இயைத்துக் கொள்க. செய்யுளில் த மறைந்தது. இப்படியே அல்லது என்ற சொல்லை அல்லாதது என்று விரித்துக்கொள்க. இதுவும் செய்யுளின் வடிவச்சொல் ஆகும்.
--------------------------------------------------------------------------------------------------------------
1 சத்து - that which exists through all times, the imperishable.
அசத்து - of material or illusory nature. opposite of sattu. a matter of transitional form, perishable.
ஆறாம் பாடலை இங்கு நினைவு கூர்வோம்:
உணர் உரு அசத்து எனின் உணராது இன்மையின்
இரு திறன் அல்லது சிவ சத்து ஆமென
இரண்டு வகையின் இசைக்குமன் னுலகமே.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.