Pages

திங்கள், 21 டிசம்பர், 2015

மகளைத் தேடிப்போய் மறைவெய்திய தாய்

வெள்ளப் பெருக்கினிலே --- தம்
செல்ல மகளிர்  இடர்ப்படுவர்  என்றே
உள்ளம் பதைபதைத்து --- உந்தேறி
ஒடி இறங்கினள் நீர்விரை வீதியில் .

ஆறிதோ முந்நீரிதோ  ---  தாய்
அதனைக் கடந்தனள்  வீட்டிற் புகுமுன்பு
சூறாவ  ளிச்சுழல்போல் --- காலைச்
சுழற்றிச் சுழற்றி  இழுத்தது  சென்றது.

ஒருசில  நாட்களின் பின் --- உயிர்
ஓய்ந்த நிலையில் தொலைவிற் கிடந்தனள்;
பெருநகர்  சென்னைதனில் --- வந்த
பேரழி வுய்த்திட்ட வேலைப் பெருமழை


மனிதர்க் கியன்றதனை --- நாம்
மனிதர் செயமுனைந் துயரநின் றாலுமே
புனித இயற்கையன்னை --- அவள்
புலியினும் மிக்கச் சீற்  றந்தனைத்   தந்தனள்

தப்பும் வழியறிவோம் ---இடர்
தாங்கும் தகைபுரிந் தோங்கி விளங்கிட
உப்புக் கடல்பொங்கினும்  --- அதை
உப்பக்கம் கண்டிட ஒப்பி  வினைசெய்க


will edit and add meanings later.

இந்த எழுதி  முந்நீரிதோ என்பதை முன்னீரிலோ 
.என்றே எழுதுகிறது.  இதை  மாற்ற வேறொரு எழுதியிலிருந்து  தருவிக்க வேண்டியதாயிற்று.
முந்நீரிதோ  -  கடலிலோ.
உப்பக்கம் --பின்பக்கம்;   (எதிர் நின்று ஒரு தடையாக  இல்லாமல்  பின்னால்  தள்ளிவைத்தல் )



 .

   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.