Pages

ஞாயிறு, 8 நவம்பர், 2015

நீரக சூறா > நரகா சூரா. Deepavali Greetings

 தீபாவளி கொண்டாடும்  அனைவருக்கும் எம்  தீபாவளி வாழ்த்துக்கள் .

தீபாவளி என்ற சொல்லுக்குப் பல பொருள் கூறப்படுகிறது. இச்சொல் எங்ஙனம் அமைந்தது  என்பதில் குழப்படி நிலவுவதால்  இச்சொல் மிக்கப் பழமை வாய்ந்த ஒரு சொல்லாய் இருக்கக் கூடும் என்று  எண்ணத் தோன்றுகிறது.

தீபாவளி என்பதை   தீப + ஆவலி  என்று பிரித்தல் கூடும்.   ஆவலம் கொட்டுதல் என்றால் சுற்றி நின்றாடுதல்.  தீபத்தை ஏற்றி வைத்து  சுற்றி நின்று கைகொட்டி ஆடுதலை இது குறிக்கிறது.   ஆவலம்> ஆவலி .  ஆவலம்  -  விளக்கை வலமாகச் சுற்றி  ஆடுதல். .  இது ஆயர் குலப் பெண்களிடத்து நடைபெற்றதென்பர்.  இவர்கள் கண்ணனை வழிபட்டதால்,  கண்ணன் இருளகற்றி  ஒளியூட்டுபவனென்பது இதிலிருந்து பெறப்படுகிறது.

ஆவலி  என்பது விளக்கு வரிசையைக் குறிக்கும் என்றும் கூறுவதுண்டு.

இப்பண்டிகையுடன்,  நரகாசுரன் கதையும் உடன் கூறப்படுவதுண்டு.
நரகாசுரன்  யார்?  அவன் கண்ணனின் மகன் என்றும் கூறுவர்.
கண்ணன்  மகாவிட்ணுவின்  தோற்றம்.   அவன்  நீல நிறம்.   கடலும் ஆகாயமும் நீல நிறம்.  அவன் நீரின் அமைப்பு அல்லது அம்சம்.

கடல் நீரில் தோன்றுவது  கடற்புயல் அல்லது  சூறாவளி.  கடவுளான  கண்ணன்   நீரக சூறாவளியை அடக்கினார்.

நீரகத்தே தோன்றிய சூறாவளி  " நீரக சூறா":  அல்லது நரகாசூரா எனப்பட்டது
அவன்" அடங்கியதும்"    நரகா சூரா வீழ்த்தப்பட்டான் எனப்பட்டது.  (உருவகம்​​) கடலில் தோன்றிய சூறா(வளி  கடலில் பிறந்தது;  ஆகவே கடலுக்கு மகன் ஆயிற்று/  ஆயினான் .  கடல்வண்ணன் கண்ணன் ஆதலின் "கண்ணனின் மகன்,"

சூறாவளி  வீசத் தொடங்கிவிட்டால்  நீரகமாகிய கடல்,  நரகம் ஆகிவிடுகிறது.
அதைவிட வேறு நரகம்  ஏது? நீரக சூறா >  நரகா சூரா.

இந்தியத் துணைக்கண்டத்துப் பெயர்கள் பலவும் தமிழ்த் திரிபுகள்.   ஒரு காலத்தில் தமிழே எங்கும் வழங்கியது;  அதுதான் காரணம்.

ஒரு காலத்தில் நாம் இயற்கையை வணங்கியவர்கள்.  அதனால் நம் தெய்வப் பெயர்கள் பல இயற்கையின் பெயர்கள்.

விண்  >  விண்ணு >  விஷ்ணு.
கரு >  கரு+ உண்+ அ  >  கருண >கர்ண >

கண்ண.  (கருப்பு சாமி )
சிவப்பு >  சிவன்.  ஒளி
கரு:  இருள்.

இந்தப் பெயர்களைச் சங்கதச் சாயலில் மாற்றித் தருவதன் நோக்கம் என்ன?தமிழன் சாமியைக் கும்பிடுகிறோம் என்ற எண்ணம் மனத்தில் தோன்றுமாயின் கும்பிடுவோனுக்கு  வெறுப்பு தோன்றக்கூடும். அதைப் பொதுமொழியில் தருவதன்மூலம் இக்கசப்பு  உணர்ச்சியை         மாற்றி இறை  நெருக்கத்தை ஏற்படுத்தவே  ஆகும்.

இவை முன்பு விளக்கப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.