:திரு காந்தி வாண்டையார் ஆசீவகம் என்ற சமயம் பற்றி எழுதிய சில வரிகள் இங்கு மீள்பதிவு செய்யப்பட்டுள்ளன . நமது இவ்விடுகைக்கு இது போதுமானது. தமிழகத்தில் தோன்றி வளர்ந்த இந்த ஆசீவக மதம் தன் சிறப்பியல்புகளில் சிலவற்றைச் சமண (ஜயன ) மதத்திற்கு வழங்கியுள்ளது. இதன் கொள்கை ஒற்றுமையின் காரணமாக ஆசீவகத்தைச் சமணம் என்று மயங்குவர் சிலர் . வெளி மாநிலம் ஒன்றில் முழுவளர்ச்சி அடைந்த நிலையில் சமணம் பின் தமிழகத்திற் புகுந்தது. (ACE_or After the Christian Era.)
#370
F.S.Gandhi vandayar F.S.G
Tolkappiam & Thirukkural explicit the ":Asivagam"
and this religion was created by tamil 'Aasiriyans'.
This religion was the base for all traditions in India. Even Buddha learnt Asivakam and included
some of the concpets into his fold. Jainism never came into being in tamil land before common era.
Jains also sweeped some of the concepts of Asivakam. All the Stone layouts in tamil land was
belonging to Asivakam and not jainism.
The athinathar Jains temples were created during 400 ACE and all of them were turned into siva
temples now.
The theory of Jainism in tamil land has been wrongly concluded so far. This has been re-
researched and latest conclusions have been made by scholars. Tamil Iyyanar tradition is the first
form of Asivakam.
A detailed topic shall be written by me after some time.
f.s.gandhi 3rd November 2006, 11:37 PM
ஆசீவகம் பற்றி மணிமேகலைக் காப்பியத்திற் குறிப்பிடப் படுகிறது
ஆசீவகம் என்ற சொல்லைப் பார்ப்போம் .
ஆசு + ஈவு + அகம்,
ஆசு = பற்றுக்கோடு; ஆதரவு, பற்றி நிற்பது.
ஈவு = தருவது; இது ஈதல் என்ற சொல்லிலிருந்து அமைந்தது.
அகம் - வீடு; இங்கு அமைப்பைக் குறிக்கிறது.
பற்றிக்கொள்ள ஒன்றும் கிடைக்காத மனிதன் பற்றி நிற்க இடம்தரும் கொள்கையமைப்பு.
ஆசிரியன் என்ற சொல்லும் ஆசு என்பதினின்றே தோன்றியுள்ளது.
இனி முதற் பதமான ஆசு என்பதைப் பார்ப்போம்.
ஆதல் : தொடங்குதல், உண்டாகுதல். அமைதல். சரியாகுதல், விளைதல், முடிதல்.
ஆ > ஆசு . சு என்பது தொழிற்பெயர் விகுதி.
மா > மாசு : அழுக்கு. மா என்பது கருப்புக்கு அணிமையானது என்று பொருள் படும்.
வினை அல்லாத சொல்லிலும் சு விகுதி வந்தது.
மா > மால். கருப்பனான சாமி,
மா - மா நிறம்
" கரிய மால் உந்தியில் வந்தோன்." : ஔவையார்
.
இவ்வாறு ஆசீவகம் என்ற சொல்லையும் சொற்பொருளையும் அறிந்து மகிழ்வீர் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.