Pages

செவ்வாய், 24 நவம்பர், 2015

சிவனும் சிவப்பாலமும்

இந்த சிவப்பாலம் என்பது  சிங்கப்பூரில் கம்போங் ஜாவா சாலையில்  (road)  இருந்த ஒரு பாலம்.   சிவ எனும்  அடைமொழி பெற்றிருந்ததால் அங்கு சிவன் இருப்பார் என்றோ சிவன் கோயில் இருக்குமென்றோ  நினைக்காதீர் .  அது ஒரு சிவப்புச்  பூசிய பாலமாக இருந்ததுதான் காரணம்.  மலாய் மக்கள் அதை  Jambatan Merah என்று  கூறினதால், அதை மொழி பெயர்த்து  சிவப்புப் பாலம் என்றனர் தமிழர் .   அப்புறம்  அது  சிவப்பாலம்  என்று  குறுகி  அமைந்தது.  (மரூஉ )  jambatan  பாலம்    merah  சிவப்பு.

மலாய்க் கம்பங்கள்  அல்லது சிற்றூர்கள்  அருகிலிருந்தன.  இப்போது  இவைகள் அங்கில்லை.   பாலத்துக்கு வேறு  சாயம்  பூசியவுடன்  அங்கிருந்த merah puteh gang ( a secret society)  செங்கருமைக்  குண்டர்  கோட்டியினர்  எங்கு போயினர்  என்பதை யாரும் அறிந்திலர்.  குண்டர்கள்  தங்கள்  மண்டர் தகுதியை இழந்தனர் போலும். ( மண்டர்  {தமிழ் }-  champions.     திவாகர நிகண்டு காண்க.)

ஏன் வேறு சாயம் பூசினார்கள்?   ஒன்றுமில்லை;    இருந்த சாயங்களைப் பூசி
இனிமை  காண்பதற்கே.  கட்டுக் கிடையாய்க் கிடக்கும் சாயங்கள் கெட்டுப் போகும். பூசி மகிழ்க .

பாலம்  இருக்கிறது;  (மேம்படுத்தப் பட்டு).
பாடை  மறைகிறது.  பார்வை  மாறுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.