இறைவனின் முத் தொழில் யாவை, அவன்றன் ஐந்தொழில் யாவை என்பதைப் பார்ப்போம்.
படைத்தல் காத்தல் அழித்தல் என்ற முத்தொழிலுடன், மறைத்தல், அருளல் என்பவற்றையும் செய்வோன் இறைவனாகிய சிவம். ஆகவே ஐந்தொழிலாகிறது. மறைத்தலாவது, மாயைகளை உண்டாக்கி உண்மைத் தன்மையை ஒளித்துவிடுதல். (தெளிவாக்காதிருத்தல்)
திரோபவித்தல், ஆன்மாவை மயக்கஞ் செய்தல். திரோதானம் என்றும் கூறுவர்.1
சிவஞான போதம் முத்தொழிலைக் குறிப்பிடுகிறது. அம்பலவாணன் ஐந்தொழில்புரிகுவன் எனினும் முத்தொழில்களே அவற்றுள் முன்மை பெற்று நிற்பவை..
உலகு தோன்றுதலும் ஒடுங்குதலும் இந்த முத்தொழில்களின் பயனே என்பார், இப்பயன் அல்லது விளைவைக் குறிக்க மூவினைமை என்ற சொல்லாட்சியை முன்வைக்கிறார்.,
அவன், அவ:ள் அது: உலகிலுள்ள பொருள் மூன்று.
படைத்தல், காத்தல், அழித்தல் = மூவினை. இங்கு வினை என்றது தொழிலை, எனவே முத்தொழில்.
தோன்றுதல் ஒடுங்குதல் : மூவினைமை. அதாவது மூவினைகளின் பயன். அதாவது முத்தொழில்களின் நேர்விளைவு .
திதி அல்லது நிலை. அந்தம். ஆதி.
மலம்: (தீவினை) .காரணம்.
திதி : இது ஸ்திதி எனவாகும்.
மூவினைமை : இதில் "மை" விகுதி என்ன குறிக்கிறது? பயன் அல்லது விளைவு குறிக்கின்றது. மை என்பது உண்மையில் மெய் என்பதன் திரிபு என்கிறார் டாக்டர் மூ. வரதராசனார் . ஆகவே முத்தொழில்களின் வெளிப்பாடு, போந்த உருவம் அல்லது பயன் . நல்வினை தீவினை என்ற வினைகள் வேறு.
===============================================
Notes:
1. also: திரோபவம் tirōpavam
, n. (Šaiva.) Function of veiling or darkening, designed to keep the souls engrossed in the experiences of the world until their karma is completely worked out Tam.Lex.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.