வீட்டினுள் புகவும் வெளியேறவும் வசதியான ஓர் இடத்தில்தான் வாயிலை அமைப்பான், வீடு கட்டுகிறவன். இதில் அவன் வெற்றிகாண்பதில் உறுதி தென்படுமானால். அடுத்து இளம்பரிதியின் காலைக் கதிர்கள் வீட்டுக்குள் வந்து இல்லத்தில் வாழ்வோரின் மேல் படவேண்டும், அதனால் உடல் நலத்துடன் மிளிரவேண்டும் என்றேல்லாம் விரும்புவான். இதற்கும் அடுத்து, வாயில் எங்கு அமைந்தால் போகூழால் புண்பட்டுப் புன்மை அடையாமல், வருவதனைத்தும் நல்ல உடல் நலமும் பணவரவுமாக இருக்கவேண்டும் என்று விரும்புவான்.. வாயில் அமையும் இடம் அதற்குத் துணை செய்யும் என்றும் எதிர்பார்ப்பான்.
இது நல்ல நம்பிக்கையா, மூட நம்பிக்கையான என்பதல்ல கேள்வி.
இதைக்கூறும் வாஸ்து சாஸ்திரத்தில் வாஸ்து என்ற சொல் எப்படி அமைந்தது என்பதே நம் ஆய்வு.
தமிழில் வாய் என்பது பல பொருளொரு சொல். இச்சொல்லின் முன்மைப் பொருள் இடம் என்பது.
இது புகுமிடத்தையும் உட்கொள்ளும் வழியையும் குறிக்கும் என்பது நீங்கள் அறிந்ததாகும்.
வாய்+ இல் = வாயில். (இல்லுள் புகுமிடம்)
வாய் - இடம்; இல் = வீடு.
வாயில் : இல் வாய்.
திரிபுகள்:
வாயில் > வாசல்.
ய > ச திரிபுவகை.
யி என்பதில் உள்ள இகரம் மறைந்து அங்கு ஓர் அகரம் தோன்றியது.
வாயிற்படி > வாசற்படி : > வாசப்படி.(பேச்சு வழக்கு).
வாய் > வாய்த்து (வாயிலுக்கு உரியது)
து என்பதும் ஒரு சொல்லாக்க விகுதி.
ஒ.நோ: வரு > வரத்து,
முன் இடுகை (அந்தஸ்து ) காண்க.
வாய்த்து > வாஸ்து. வாயிலுக்குரிய சாத்திரம்,
இக்கலை வளர வளர வாயில் மட்டுமின்றி சுவர், தரை கூரை எல்லாவற்றையும் பற்றிக்கொண்டு விரிவடைந்தது.
( the base (foundation), column, entablature, wings, roof and dome.)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.