மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
பலர்காணும் பூவொக்கு மென்று
என்பதோர் அழகிய குறள்.
மலர் காணின் - நீ மலரைப் பார்த்தால்;
மையாத்தி - மயங்கி நிற்காதே!
நெஞ்சே - என் நெஞ்சமே! (இப்போது காதலன் தன் நெஞ்சிடம் பேசிக்கொண்டிருக்கிறான்)
இவள்கண் - என் காதலியாகிய இவள் கண்கள்;
பலர் காணும் - பலரும் கண்டு பார்வையால் சுவைக்கும்;
பூ ஒக்கும் என்று - மலர்வனத்தில் உள்ள பூவிற்கு இணையானது என்று.
அவள் கண்கள் யாவரும் கண்டு களித்தற்கு உரியவை அல்ல!
அவனுக்கே உரியவை. அவன்மட்டும் கண்டு சுவைப்பான்! ஆகவே செடியிலுள்ள மலர்கள் அவள் கண்களுக்கு எப்படி இணையாக முடியும்.
ஆகவே ஒப்புமை சொல்லலாம்; அது உருவொற்றுமை; அதனின் மிக்க பொருத்தமொன்றுமில்லை. இவள் கண்கள் நாளை வாடிப் போவன அல்ல .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.