Pages

வியாழன், 27 ஆகஸ்ட், 2015

விரட்டினாலும் கேட்கவில்லை.

அடுத்த வீட்டு  நாய்தான்!  --- என்னுடன் 
அன்பும் பாசமும் உள்ள நாய்  ---  நான் 
 எடுத்து  வைத்த ஒவ்வோர்  அடியைபும் ---- அளவில் 
ஏறிய கவனத்துடன் கண்காணித்துக்கொண்டு ---- நடந்து 
தொடுத்த பாதையில் தொடர்ந்ததே!---- நான் 
துவளாமல் இரு கல் தொலைவு சென்று :


நீருக்கும் மின்சாரத்துக்கும் காசு கட்டி --- கொஞ்சம் 
நேரம் சென்றதும் நேராக வெளிவந்தேன் ;
யாருக்கும் தெரியாமல்,  வெளியில் நின்ற நாய் 
யாதோர்  ஒலியும் செய்யாமல் 

காணாமல் போனதுதான் கவலை 
காலையில் எழுந்து  
வேலைக்குச் செல்வோரைப் பார்த்துக் குலைக்க 
நாளைக்கு அந்த நாய்  இருக்காதோ!

வண்டி ஒட்டிக்கொண்டு போயிருந்தால் --  இத்தகைய 
வம்பொன்றும் வந்திருக்காதே!

ஒரு கல்லில் இரு மாங்காய்  என்றபடி 
உடற்பயிற்சியும் வேண்டும் ,
ஒரு வேலையும் நடக்கவேண்டும்  என்று நினைத்தால் 
பாவம் நாய் தொலைந்துவிட்டதே! 

என்னுடன் வராதே என்று விரட்டினாலும் 
கேட்கவில்லை......... என் செய்வது !

சாப்பாடு எங்கேயும் கிடைத்ததோ .என்னவோ.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.