தமிழென்ப தே ஒரு தென்றல்---- அது
தரணியெல் லாமுலவும் தடைதானும் உண்டோ?
அமைந்துள்ள அரண்களுள் போகும் --- பின்போ
அவைநீங்கிக் கானகம் வெளிகளில் ஏகும்.
உலவுதல் புரிகின்ற பொழுதில் --அதன்
உராய்வினில் அயல் நின்ற பொருள்கூடி வீசும்
சிலவந்து கலந்திட்ட போதும் ---- அண்ணே
தென்றல் வேறாம்சேர்ந்த பிறவேறு கண்டீர்
தென்றலில் வருகின்ற இன்பம் --- அண்ணே
சேர்ந்துவீ சும்மவற் றிடைகண்ட துண்டோ
மன்றிடும் மகரந்த மணமோ---- அதன்
மாண்புவே றாம்பிற மாசுவே றாகும்.
edited.
இத்தகைய கவிதைகளைப் பெரும்பாலும் வெண்டளையில் எழுதுவர். இதை யான் கருதாமல் கைக்கு வந்தவாறு எழுதியுள்ளேன் . செதுக்கி வெண்டளை என்னும் உறைக்குள் இடலாம் என்ற எண்ணம் வந்தது. ஆனால் செயல் படுத்தவில்லை. எப்படி வந்ததோ அப்படியே இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன் இதன் விளைவு சிலவிடங்களில் சந்த முறிவு. முறிவு விலக்குவதாயின் :
(எ-டு )
"தரணி உலாவத் தடைதானும் உண்டோ ? " என்று இரண்டாம் அடியில் வரவேண்டும். பிறவும் அன்ன
தரணி உ / லாவத் த / டை தானும் / உண்டோ
என்று வகையுளிப் படுத்தி அறிக.
Well if you are a grammar enthusiast, then I have left it in its crudest form. Just read, understand and discard.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.