இப்போது பரம்பரை என்ற சொல்லைச் சற்றே நுணுகி நோக்குவோம்.
இதன் அடிச்சொல் பரத்தல் என்பது.
பர (வினைச்சொல்) > பரத்தல்.
பரத்தலாவது: விரிவான முறையில் இடம் கொள்ளுதலாகும்.
மற்றும்: பரவுதல், பரப்புதல் முதலிய சொற்களும் இவ்வினை அடியாகப் பிறந்த சொற்களே ஆகும். பரப்புதல் என்னும் சொல் பிறவினை என்பது நீங்கள் அறிந்ததே.
இந்த அடியிலிருந்த் அமைந்ததே பரம் என்பது.
பர+அம் = பரம். இதில் விகுதியில் உள்ள அகரம் கெட்டு (மறைந்து)
பர+ம் பரம் என்றானது என்று வைத்துக்கொள்ளலாம். இன்னொரு வகையில்
பார்த்தால் பர என்ற அடிச்சொல்லில் உள்ள அகரம் கெட்டது என்றும்
சொல்லலாம். இப்படிப் பட்ட முறையைத்தான் பாணினி என்ற வட இலக்கணியர் கையாண்டார். இதற்குக் காரணம், "பர்" என்பதைச் சொல்லமைப்பு அடியாகக் கொண்டால், பல தொடர்புடைய சொற்களுக்குப் பொருள் கூறவும் புதியன படைக்கவும் எளிமையாய் இருக்கும்.
பரம்பொருள்: எங்கும் பரவி அல்லது பரந்து விரிந்து கிடப்பதாக உணரப்படும்
பொருளாகிய கடவுள்,
பர+ அன் = பரன்.
பரன் > தயாபரன்.
( தயங்கு : இதிலுள்ள கு என்ற வினைச்சொல்லாக விகுதியை எடுத்துவிட்டால், மீதமிருப்பது "தய". அன்பருக்கு இடர் உண்டாக்கத் தயங்குதலே " தயை".தண்டிக்காமல் நிற்பதுவே தய> தயை. மேலும் தை = இணைத்தல். இணைந்து அன்பினால் இடர்வாராது நிற்பதுவே தயை. தை> தைத்தல்= இணைத்தல். இவை எல்லாம் தொடர்புபட்ட சொற்கள் என்பதை நுழைபுலத்தால் நுணுகினால் சொல்லாமல் விளங்குமே! இது விரிக்காது விடுவோம்)
பர+ அல் = பரவல். "பரவலாக மழை பெய்துகொண்டிருக்கிறது" பல இடங்களில் மழை .... என்று பொருள்.
பர + ஐ = பரை,
பறை என்பது வேறு. (பர்) > ஐ= பரை. இப்போது எளிதாகிவிட்டது. Thus you
arrive at paramparai. பரம் + பரை = பரம்பரை .
Your succeeding generations spread over time. The basic idea is "spreading", which is what paramparai is about. It does not matter if it is found in Sanga Ilakkiyam or not. Only few of what has been written have been discovered by strenuous efforts of a few like UV Saminatha Iyer. If he had not made his effort, you would not have any literature of Sangam at all.
If a language has no literature at all, how would you decide whether a word belongs to that language or another? Follow that method.
பர் என்பது ஒரு பொய் அடிச்சொல். விளக்க வசதிக்காக, அறிதல்
எளிமைக்காக, சொல்லாக்க நேரச் சுருக்குக்காகப் படைக்கப்பட்ட சொல்.
பல பிற மொழிகளின் தாய் தமிழ்தான். நம் சொற்கள் அங்கும் வாழ்கின்றன.
நாம் அறிகின்றோம் ; அவை வாழ்கின்றன.
note:
Will edit if need is discovered. A bug attack occurred during this write up and some parts might have been lost. I shall try to recall and reconstruct.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.