Pages

செவ்வாய், 17 மார்ச், 2015

ஊர் சுற்றி அழகு மாவு பூசிய சொற்கள்

சமஸ்கிருதத்தைப் பொறுத்தவரை,  ஸ் , ஷ்   ( இன்னும் இவைபோல்வன ) முதலான எழுத்துக்கள் இல்லாதசொல் நாவால் ஒலிக்க ஓர்  அழகில்லாத சொல் என்று சொன்னால்   மிகையன்று.

கா என்றால்  எவள் என்பது. எவளுக்கு  என்று கேட்க வேண்டின் ஒருமையில்  "கஸ்யை " ?  என்று திரிந்துவிடுகிறது. எவளிடமிருந்து  என்று  கேட்க "கஸ்யா "?   என்று சொல் மாறுகிறது.

எவன் என்று பொருள் படும் "க :" என்னும்  சொல்,  பன்மையில் "எவர்களுடைய   "  என்று கேட்க "கேஷாம் "  என்று  மாறும்.

அம்மொழியின் இயல்பு ,  அடிச்சொல்லில்   ஸ் , ஷ்  இல்லாதபோதும்  இப்படி
மாறுகின்றன.

கடு + அம்  = கட்டம் என்பது  கஷ்டம் என்றும்   மாறியதில்  வியப்பென்ன?
இடு + அம்  = இட்டம்  (மனத்தை  இடுவது )  இஷ்டம் ஆயிற்றே ! இப்படிப்  பன்னூறு .
ஹா  ஹா ஹா என்ற சிரிப்பொலியிலிருந்து  ஒரு சொல் :  ஹா+ அம் >  ஹாயம்  என்று அமையவில்லை . ஹாஸ்யம்  என்று நடு "ஸ் " தோன்றியது.

பழம் என்பது தமிழ் . இது  நேரடியாகவோ  மற்ற பாகதங்கள் மூலமாகவோ  சமஸ்கிருதம் சென்றது ., ஹ்மெர்  மொழியில்  ப்ஹ்லே  ஆனது . வடமொழியில் "ப்ஹல "  ஆனது.  சில வேளைகளில் இடைப்பட்ட மொழியில்
சென்றேறுகையில் தமிழில் இல்லாத ஓர்  ஒலி  ஒட்டிக்கொள்ளும். பின் அந்தச் சொல் தன்  பயணம் தொடர்ந்து வடமொழி புகுதல் ஆய்வில் புலப்படும் . பழம் தமிழா அன்றா ?   மேலை (German Italian French etc ) இந்தோ ஐரோப்பியத்தில்  பழம் பலம் ஆகியவை இல்லை.  ஆதலின் அது திராவிடச் சொல்  = தமிழாகும்.

சம்ஸ்கிருதம் மின்னுவது இத்தகைய ஒலிகளால்தாம்.  வேற்றுச்சொல் எடுத்தாலும்  ஒரு ஸ் போடவேண்டும் .

இறைவர் >  இ - (ஷ்) -வர்  > ஈஷ்வர் >  ஈஸ்வர்  பின் ஈசுவரன் என்று தமிழுக்கே திரும்பியது . ஒவ்வொரு மொழியின் இயல்பும் அறியவேண்டும்.

ஊர் சுற்றி அழகு மாவு பூசிய  சொற்கள்  இங்கு சில .


    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.