Pages

வெள்ளி, 27 பிப்ரவரி, 2015

திசைச்சொல் என்றால் என்ன?

திசைச்சொல் என்றால் என்ன?

செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தில் ‍==  அதாவது தமிழ் நாட்டில் ==வழங்காமல்  பிற ஆந்திரம், (தெலுங்கானா,) கருநாடகம், கேரளம் முதலிய மாநிலங்களில் வழங்கும் சிறப்புச் சொற்களே திசைச்சொற்கள் என்று மொழிஞாயிறு தேவ நேயப் பாவாணர் கூறுகிறார். செந்தமிழ் = இயல்பான தமிழ். கொடுந்தமிழ் திரிபு என்றும் உணர்த்துகிறார். திசையை நோக்கினால், திசைச்சொற்கள் தமிழ் வழங்கும் தென்பகுதிக்கு வடபால் வழங்குபவை.

 கொடுந்தமிழிலிருந்து செந்தமிழ் திரிந்தமையவில்லை. இது பாகதங்களிலிருந்து திருந்தி அமைந்த சமஸ்கிருதத்துக்கு மாறான நிலைமை ஆகும்.

 இனி, "திசைச்சொல்:  திசைகளில் வழங்குகின்ற  தேச பாழைகளிலிருந்து செந்தமிழில் வந்து வழங்கும் சொற்கள்." இது சடகோப இராமாநுச கிருட்டினமாச்சாரியார்  ( நன்னூல்   ) உரை. இதை பாவாணர் மேற்கோள் காட்டியுள்ளார்.

 ஆக, ஆங்கிலச் சொல் போல்வது  "அயற்சொல்" எனப்படும். திசைச்சொல் அன்று என்று தெரிகிறது

இனித் தொல்காப்பிய நூற்பா:

செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும் 
தங்க்குறிப்பினவே  திசைச்சொற்  கிளவி    (எச்சவியல்  4 ).

நன்னூல் :  

செந்தமிழ்  நிலஞ்சேர் பன்னிரு நிலத்தினும் 
ஒன்பதிற்றிரண்டினில் தமிழ் ஒழி நிலத்தினும் 
தம் குறிப்பினவே திசைச் சொல்  என்ப..   (பெய).



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.