திங்களன்று திருக்குடமே நீராட்டப் பெறுகின்ற நன்னாள் காணும்
தங்கக்க லசமுடைய தன்னிகரே இல்லாத வினாய கன்றன்
துங்கமுறு ஆலயத்திற் சென்றுதொழு திணையில்லா மனக்க ளிப்பில்
பங்கமறு சீர்வாழ்க்கை பாரினிலே பெறுவீரே பாக்கி யம்மே
முன்னாளில் இவண்வந்த இந்துக்கள் மூதறிவால் நிறுவிச் சென்றார்
இந் நாளும் இன்னாளாய் இருந்திடவே இவ்விடமே கோவில் கண்டார்
எ ந் நாவில் மொழிவாரும் என் நாதன் என வணங்கித் துன்பம் நீங்கிக்
கண்ணாரக் கண்டுவழி காண்புறுத்தும் வினாயகனைக் கருத்தில் வையே
எ ந் நாவில் - எந்த பாடையில் ;
விழுமியநல் நாயகனே விநாயகனாம் என்றுணர்வார் பல்லோர் உண்டே
விழும்எழும்பல் வேதனைசேர் வினைஆய்வான் அவனென்பார் பல்லோர் உண்டே
அழும்குரல் கேட் டாதரவு நல்கிடுவான் வினாயகனே கண்டோர் உண்டே
உழும் நிலத்துப் பயிராகும் உள்ளன்பால் வினாயகனைக் கருத்தில் வையே.
place: SeNpaga VinAyakar Alayam, Ceylon Rd Singapore
will edit

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.