Pages

வியாழன், 15 ஜனவரி, 2015

பிழைகள்


அடிவரை யின்றி யளவொத்து மந்தடி நீண்டிசைப்பிற்
கடிதலில் லாக்கலித் தாழிசை யாகுங் கலித்துறையே
நெடிலடி நான்காய் நிகழ்வது நேரடி யிரண்டாய்
விடினது வாகும் விருத்தந் திருத்தகு மெல்லியலே (34)


இது  காரிகை என்னும் இலக்கண நூலிலிருந்து வரும் பாடல். மதுரை மின் சுவடியிலிருந்து எடுக்கப் பட்டது.  மூன்றாமடியில் ஓர்  எழுத்துப் பிழை  உள்ளது. " ஈ ரி ர ண் டா ய்"  என்று மூன்றாம் அடியின் இறுதிச்சீர் வரவேண்டும்.  இப்போது இந்த நூல் கைவசம் இல்லை.

பிழைகளைக் கண்டுபிடித்துச் சரியாக வாசித்துக் கொள்ள வேண்டியது கடன் ஆகும் 

இந்த வலைப்பூவிலும் இத்தகு பிழைகள் இருக்கலாம். இதை நினைத்தால் ஒரு புறம் அச்சமே ஏற்படுகின்றது   நீங்கள் இங்கு உலவும்போது இப்படி ஏதேனும் கண்டால் தெரிவித்து உதவுங்கள்.  மிக்க நன்றியுள்ளவளாய் இருப்பேன்  என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்

அகத்திருத்தம்:auto correction feature:  " மின்  சுவடி"  என்பதை இடைவெளி இன்றி  எழுதினால்  அதைக்   கணினி     மிஞ்சுவடி  என்று  அன்றோ   மாற்றிக்  கொள்கிறது,   எழுதினவர்  நீங்கி ச்   சென்றபின்  அது    தானே  நடைபெறுகிறதே ! எழுத்துப் பிழைகளை  (அதாவது  அச்சில் ஏற்றும்போது  ஏற்படும்  பிழைகளை ) printers devil  என்று சொல்வார்கள்.... இந்தப் பேய் பிடிக்காமல்  எழுதவேண்டும். வெளியிடவேண்டும். இதுவே  ஒவ்வோர்  எழுத்தாளனதும்  குறிக்கோள் எனினும்  அது நிறைவேற்றம் பெற கடின உழைப்பும் கருவிகளின்  ஒத்தியல்வும்  வேண்டும் 

மேற்கண்ட பாடலுக்குப்  பொருள் எழுதவேண்டும் என்றுதான் புறப்பட்டேன்.   ஆனால்  அப்போது ஏற்பட்ட மின்  தடையும்  பிற இடையூறுகளாலும் எழுதவில்லை.  பிறிதொரு பொழுதில் அதைச்  செய்வேன். 

Some changes I made to the text do not appear in the final output  despite attempts, I  am unable to correct this presently.









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.