Pages

செவ்வாய், 20 ஜனவரி, 2015

தீயின்றி .......... மனம் வேகும்

தீயின்றி வேம்தமியோர் சிந்தை;  செழுந்தேறல்
வாயின்றி மஞ்ஞை மகிழ்தூங்கும்  ---  வாயிலார்
இன்றிச் சிலர் ஊடல் தீர்ந்தார்; அமர்கின்றி
கன்றிச் சிலைவளைக்கும் கார்.

தமியோர் சிந்தை =  தனிமையில் (வாடுவோரின் )  மனம்.
தீயின்றி வேம்  =  நெருப்பு இல்லாமலே வேகுவதாம்.
 செழுந்தேறல்  வாயின்றி =  வளமான  குடி பானம் வாய்ச் சேர்தல் இல்லாமலேயே,

மஞ்ஞை  -  மயில்கள்,  மகிழ்தூங்கும்  =  மகிழ்ந்து தூங்கும்; (ஆடும்  என்பர் )
வாயிலார் இன்றி  =   இடைச் செல்பவர் யாரும் இன்றியே,
http://sivamaalaa.blogspot.com/2015/01/blog-post_18.html  meaning of  வாயிலார்.
சிலர் ஊடல் தீர்ந்தார் = சில( காதல)ர் ஊடுதலை விடுவர்;
அமர்கின்றி  =  போர் இல்லாமலேயே, அமர் = போர். அமர்த்தல் - to be at strife.
அமர்தல் : to be engaged.  அமர்கின்றி = அமர் + கு+ இன்றி.
கார். =  கார்மேகமானது;
கன்றி  = சினந்து;
ஒப்பீடு:  கனலுதல் -  சினத்தல். கன் > கனல் .  (கன்றுதல் - சினத்தல் )
Some dictionaries may have omitted this word.  கன்றி  : வினை எச்சம்.
சிலை வளைக்கும் = வான வில்லை வளைக்கும்.

இது தண்டியலங்காரம் என்ற நூலில் உள்ள பாட்டு.  பிறிதாராய்ச்சி அணிக்கு ஓர்  எடுத்துக்காட்டு.  இயற்கையில் நடைபெறும் நிகழ்வுகள்  ஒவ்வொன்றுக்கும் ஏதேனும் ஒரு காரணம் இருக்கலாம். நாம் அதனை அறியாமலும் இருக்கலாம். கவிஞன் இவற்றுக்குத்  தன்  கற்பனையின் மூலம் இட்டுக்கட்டி உரைப்பதே இவ்வணியாகும்.


தீ இன்றி வேகுவது எது ? தனிமைத்  துன்பம் உழந்தார் மனம்.  தனியவர்  மனம் வேகுதல் கற்பனை.  கவலை , ஏக்கம்  இருக்கலாம். தீயில் போல் வேகுதல் கற்பனை.  ஏக்கம் வேறு; வேகுதல் வேறு; இரண்டும்  ஒப்பிடப்படுகிறது. தீயின் சுட்டெரிக்கும் தன்மை தனிமைத்துன்பத்தின் பால் கொண்டு ஏற்றப்படுகிறது.

இங்ஙனமே பிறவும். இப்பாடல் சுவை நுகர்க .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.