Pages

வெள்ளி, 12 டிசம்பர், 2014

தமிழனே கட்டினான் ஓர்கோவில்

தமிழனே கட்டினான் ஓர்கோவில் == அது
தங்கிடும் கீர்த்தியில் மக்கள்நாவில்;
இமிழ்கடற் க‌ப்பால் ஒருதீவில் == கொலை
இழைத்தோற் கருளுமோ இந்த நாளில்?

ஒப்பார் உலகினர் எங்கெங்குமே == மக்கள்
ஒன்றெனக் கொள்வதே தங்கமென்க;
நற்பார் அமைந்திட நன்மைபெற == மேலோர் 
நாடும் அதுவழி புன்மையற.

இம்மா உணர்வில் இழிகொள்கையன் ‍‍== அவற்
கிடமோ தேவனின் சிந்தைதன்னில்;
தம்மா றதன்தவ றாய்ந்துபோற்றான் == கோயில்
தன்னில் இறையருள் பெற்றதுண்டோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.