தும்பைத் திணையில் புலவர் ஒரு வேந்தனின் படைப்பலத்தைப் புகழ்ந்துரைப்பார். அதே பாடலில் பகை அரசானது வலிமையின்மைக்கும் அவனை நோக்கி வந்துகொண்டிருக்கும் தோல்விக்கும் அதனால் ஏற்படும் கேட்டிற்கும் மனம் .இரங்குவார் .
இதைக் கூறும் துறைக்குத் "தானைமறம் " என்று குறிப்பர் இலக்கணியர்.
(தன்னிகர் இல்லாத் தானை மறமே )
வேற்றானை மறங்கூறி
மாற்றார் அழிபு இரங்கினும்
ஆற்றின் உணரின்
அத்துறை ஆகும்.
(ஓம்படுத்த உயர்பு கூறின்று.)
இது கொளு. பிறைக்கோட்டினுள் உள்ளவை வேறு பாடலின்று தருவிக்கப் பட்டவை.
உயர்பு மட்டும் கூறினும் துறை அதுவாம்.
உருள் பெருந்தேர் ! வெல்லும் குதிரைகள்! தலை சிறந்த மத யானைகள்! வீரமிக்க மன்னனும் படை வீரர்களும். இந்தப் படையை வெல்ல வேறு உண்டோ என்று பாடினால் .........தும்பைத் திணை ; தானை மறம் என்னும் துறை.
இப்பொருள் பற்றிய புறப் பாடல் வரின் கண்டின்புறுக.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.