பல சொற்களில் லகரம் னகரமாய் மாறியிருத்தலை யாம் பல இடுகைகளில் சுட்டிக்காட்டியுள்ளோம். அறிஞர் பிறரும் எடுத்துக்காட்டியுள்ளனர்.
எடுத்துக்காட்டு:
கல் > (கன்) > கனம். (கல் கனமானது).
கல்லுதல் தோண்டுதல்.
கல் > கன் > கன்னம் > கன்னக்கோல்.
பேச்சு வழக்கில் நல்லா என்பது நன்னா என்று வருகிறது என்பது நீங்கள்
அறிந்தது
அன் விகுதிக்கு முந்தியது அல். பல சொற்களில் இன்னும் அல் விகுதி காணப்படுகிறது:
வள்ளல் ; இளவல். தோன்றல் (தலைவன் என்ற பொருள்).
நல் என்பதன் அடிப்பிறந்த நன் > நன்னா என்பதை மேலே குறித்துள்ளேன்.
நல் என்பது ந என்று குறையும்.
நப்பிள்ளையார், நச்செள்ளையார் என்ற சங்கப் புலவர்களின் பெயர்களில் வரும் ந என்பது நல் என்பதன் கடைக்குறை.
அதனிலும் இது பெரிது, அதனினும் இது பெரிது என்பனவற்றில்
லகரத்திற்கு ன்கரம் ஈடாக நிற்றல் அறிக.

எனில் > எனின் .
இதனாலே < இதனானே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.