நெஞ்சுக் கூட்டுக்குள் இருக்கும் உள்ளுறுப்புகள் பல, அவற்றுள் ஒன்று ஈரல் மூச்சை உள்ளிழுக்கும் செயலைச் செய்கின்றது; இன்னொன்று அரத்தத்தை உள்ளிழுக்கும் (இழுத்து வெளியில் இருக்கும் குழாய்களில் செலுத்தும் ) வேலையச் செய்கிறது.
ஈரல் என்ற பெயர் ஏற்படக் காரணம் உள்ளிழுக்கும் செயல்தான். ஈர்த்தல் - உள்ளிழுத்தல்.ஈருள்
ஈர் > ஈர்த்தல்;
ஈர் > ஈரல் (அல் விகுதி}
ஈருள் : ஈர் + உள் (உள் விகுதி)
தமிழில் வழங்கும் இருதயம், இதயம் என்பனவும் இவ்வடியினின்றே தோன்றியனவாம்.
ஈர் > ஈர்+ து + அ + அம்= ஈர்தயம் > இருதயம் > இதயம்.
ஈர் என்பது இர் என்று குறுக்கம் பெற்றது.
து என்ற அஃறிணை விகுதிச்சொல் இங்கு சொல்லாக்க இடைநிலையாய் இடப்பட்டுள்ளது.
அ என்ற சொல்லாக்கச் சாரியை இடப்பட்டுள்ளது.
அகரத்துக்கும் இறுதி அம் விகுதிக்குமிடையே உடம்படுமெய் யகரம் முளைப்பது இயல்பு.
இஃது திறம்பட அமைக்கப்பட்டுள்ளது.
இதயம் என்பது இருதயமென்பதன் இடைக்குறை.
அறிந்து ஆனந்தமடையுங்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.