அவர் தேர்வில் வாகை சூடி விட்டார் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். இங்கு வாகை சூடுதல் என்றது வெற்றி பெற்றதை. சில வேளைகளில் தாளிகைகளிலும் இச்சொற்றொடர் காணப்பெறுவதுண்டு.
பகை அரசர்களை வெற்றிகொண்ட மன்னன் , வாகைப்பூ, இலை முதலியன சூடிக்கொண்டு அதனைக் கொண்டாடுவான். அவ்வரசனைப் புலவர் பாடினால், அப்பாடல் "வாகைத் திணை"யின் பாற்படும். வாகைத் திணையிலும் 33 துறைகள் உள்ளன.
தமிழ் மொழி விரிந்த பொருளிலக்கணம் உடையது. வேறெந்த மொழியிலும் பொருளிலக்கணம் இருப்பதாகத் தெரியவில்ல . தமிழனும் தமிழும் அத்தகு புகழுக்குரிய உலகச் செல்வங்கள்.
இதை விளக்கும் கொளுப் பாடலை இப்போது காண்போம்.
இலை புனை வாகை சூடி இகல் மலைந்து
அலைகடல் தானை அரசு அட்டு ஆர்த்தன்று.
அரும்பொருள்
இலை - தளிருடன், புனை - சேர்த்துக் கட்டி, இகல் மலைந்து -- பகை நடவடிக்கை மேற்கொண்டு, கடல் - கடல்போன்ற; தானை = படை;
அரசு அட்டு = பகை அரசனை வென்று; ஆர்த்தன்று = ஆரவாரித்தது .
இப்பாடல் தெளிவாகவே உள்ளது.
அடுத்த இடுகையில் தொடரும், அதுவரை மேலுள்ளவற்றைப் படித்து .இன்புறுங்கள் .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.