வேலைக்காரன், வண்டிக்காரன், சண்டைக்காரன், குடும்பக்காரன் என்று "காரர்கள்" பலருளர். காரன் என்பதென்ன?
காரன் என்றொரு சொல், அகரவரிசைகளில் காண்பதரிது. அது ஒரு தனிச்சொல் அன்று.
கருத்தல் = செய்தல் என்னும் பொருளில் ஒரு பழங்கால் வினைச்சொல் இருந்ததென்றும் அதனின்று கருவி, காரியம், காரணம் முதலிய தோன்றினவென்றும், பின் அது வழக்கொழிந்தது என்றும் மொழிஞாயிறு தேவ நேயப் பாவாணர் மீட்டுருவாக்கம் செய்து கூறியுள்ளார். எனவே காரன் என்பதும் கரு என்னும் சொல்லினின்று பிறந்து செய்வோன் என்னும் பொருளில் வழங்கி வந்துள்ளது என்று கூறலும் கொள்ளற்குரித்தே.
ஆயினும், நாம் வேறு வழியில் இஃது அமைந்திருக்குமா என்று பார்க்கலாம்.
வேலைக்காரன் < வேலை+ கு+ ஆர் + அன்.
இதில் அன் என்னும் ஆண்பால் விகுதியை எடுத்துவிட்டுப் பார்த்தால்:
வேலை + கு + ஆர்.
வேலைக்கார் என்றாகிறது. ஆர் என்ற பலர்பால் விகுதி, அவர் என்பது அதன் பொருள். அர், ஆர் இரண்டும் அத்தகையனவாகும்.
ஒரு வாக்கியத்தின் சுருக்கமே அது. உண்மையில், வேலைக்கு அவர், சண்டைக்கு அவர் என்று சொல்வதே அதுவன்றி மற்றில்லை.
பின் ஆர் என்பது பன்மை எனல் மறந்து, மீண்டும் அதன்பின் ஓர் ஆண்பால் அல்லது பெண்பால் ஒருமை விகுதியைச் சேர்த்தனர். அது ஒருமைபன்மை ஒருவித "மயக்கம்". வழு எனினும் அமைந்துவிட்டபடியால், இலக்கணம் ஏற்கும் அது வழுவமைதி எனப்படும்.
தகப்பன் என்ற ஒருமையில், ஆர் விகுதி சேர்த்து தகப்பனார் என்று மரியாதைப் பன்மையில் கூறுவதும் வழுவமைதியே.
கு என்ற உருபு பற்றித் தனியே எழுதவேண்டும். இங்கு வேண்டாம்.
ஆக, காரன் என்பது பிறழ்பிரிப்பினால் metanalysis. விளைந்த சொல்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.