இப்போது நாம் தினமும் அருந்தும் "ரசம் " பற்றி ஆய்வோம். இந்தச் சொல் சமஸ்கிருதத்திலும் மலாய் மொழியிலும் கூட உள்ளது.
"rasa sedap" -சுவையாக உள்ளது என்று மலாயில் வரும் .. saya rasa...... I feel ....என்று மனவுணர்வும் குறிக்கும்.
அரை (அரைத்தல்) > அரையம் > அரயம் > ரசம் .
சில மூலிகைகள் அரைத்துக் கொதிக்கவைத்துச் சாறு எடுக்கப்பட்டு அதுவே ரசம் எனப்பட்டது. அரைக்காமல் கொதிக்கவைத்து எடுக்கப்பட்ட சாறும், இதில் அடக்கப்பட்டது. (இது பொருள் விரிபாடு ஆகும். extension of meaning. )
முடக்காத்தான் முதலியவை அரைத்துக் கொதியூட்டிச் சாறு எடுக்கப்படும் .
ரை என்பது ர ஆனது ஐகாரக்குறுக்கம். யகரம் சகரம் ஆவது முன் கூறப்பட்டுள்ளது.
நவரசம் - தொண்சுவை என்று தனித்தமிழில் தரப்படும்.
ரசம் என்பது பேச்சு வழக்கில் வந்த அடுக்களைச் சொல். தலையிழந்தது .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.