Pages

செவ்வாய், 27 மே, 2014

தைரியசாலி

தைரியம்   என்ற  சொல் அமைந்த விதம் எங்ஙனம்  என்பது கண்டோம்.  தைத்தல் என்பது இணைத்தல், சேர்த்தல்,  பிணைத்தல் என்றெல்லாம் பொருள்தரும்.  மனப் பிணைப்பு  என்பது மன ஈடுபாடு.  இத்தகைய ஈடுபாட்டில் மிக்க உறுதிகொண்டு   செயல்படத் தயங்காது நிற்றலே "தைரியம்:".   ஆகும்.   அமைந்துவிட்ட ஒரு சொல்  பயன்பாடு கணக்காண அதன் பொருண்மை விரிதலும் சுருங்குதலும் புதுப்பொருளைத்  தழுவுதலும் மொழி எங்கினும் மலிந்து கிடப்பதே.

சாலி என்பதை இப்போது அறிந்து இன்புறுவோம்.

சாலுதல் -  நிறைதல்.

சால -  நிறைய.   (சாலச் சிறந்தது  என்பது நோக்கவும் )

சாலி -   நிறைந்தோன், நிறைந்தவள்.

தைரிய சாலி -  தைரியம் நிறைந்த ஆள் .


இது தொடர்பான  முன் இடுகை இங்கே காணலாம்.

Click here to see more on Thairiyam:

http://sivamaalaa.blogspot.com/2014/05/blog-post_27.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.