தேர்தலென்றால் தேசத்தின் சேவைக்குத் தான்தன்னைத்
தந்துவிடல் என்பதாகும்;
தேர்தலிலே வெற்றியெனின் சேவைசெய் வாவென்று
தேசமக்கள் வேண்டலாகும்;
ஊர்களிலே தேர்தலின்முன் போடுகின்ற சண்டைகளை
உற்றுப்பார்க் கின்றபோது,
பார்தனிலே இப்பொருளை யாருணர்ந்தார் என்றுளத்தே
கேள்வியொன்று பற்றிநிற்கும்.
என்றாலும் எண்ணிக்கை நோக்கிற்பின் இத்தகுஓர்
நேர்ச்சியினால் குற்றமில்லை;
வென்றாலும் தோற்றாலும் பல்லாயி ரத்தவர்கள்
நின்றதனால் மக்களாட்சி
என்றென்றும் நின்றிடுமே எழில்சேவைக் கித்தனைபேர்
உண்டென்று கூறுங்காலை
நன்றெனவே நல்லறிஞர் நாடிடும்நேர் ஞயம்காண்பர்
ஞாலமிதைப் போற்றிப்பாடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.