மோடி பதவி ஏற்பு
(வஞ்சிப்பா)
பதவி நிற்புறுதி
படிக்கையிலே சொற்பிழ்ச்சி
பதட்டமோ ஏதுமின்றி
பண்புடனே விண்பயந்த
நக்கத் திரத்தினைப்போல்
ஒக்க நிற்பார் கையொலியை
உடன்பெற்ற மோடியுமே
நடமுற்றார் நம் மனத்தில்.
நல்லாட்சி வருமெனற்குப்
பல்லாற்றானும் குறிப்பே!
பிறமதத்துத் தேயங்களில்
பிறங்கிடும் தலைவர்கள், தம்
திறங்காணும் விதமாக
மதப்பித்தம் சிதல்படவே
மாட்சியுடன் மேற்செலுத்தும்
காட்சியும் புகழரிதே!
என்றிவற்றால்
கூடி வருமோர் கோடுயர் புகழுச்சி
மோடியும் மக்கள் முன்னே
நாடிடும் அனைத்தும் நலமோ டுயர்கவே.
பதவி நிற்புறுதி == பதவிப் பிரமாணம் . விண் பயந்த - வானம் தந்த
நக்கத்திரம் - நட்சத்திரம் பல்லாற்றானும் - பல வழிகளிலும் .
தேயம் - நாடு. சிதல் - அழிவு.
என்றிவற்றால் , தனிச்சொல் . பழம் பாடல்களில் எனவாங்கு என்று வரும்.
கோடுயர் - மலை உயர்ந்த .
(வஞ்சிப்பா)
பதவி நிற்புறுதி
படிக்கையிலே சொற்பிழ்ச்சி
பதட்டமோ ஏதுமின்றி
பண்புடனே விண்பயந்த
நக்கத் திரத்தினைப்போல்
ஒக்க நிற்பார் கையொலியை
உடன்பெற்ற மோடியுமே
நடமுற்றார் நம் மனத்தில்.
நல்லாட்சி வருமெனற்குப்
பல்லாற்றானும் குறிப்பே!
பிறமதத்துத் தேயங்களில்
பிறங்கிடும் தலைவர்கள், தம்
திறங்காணும் விதமாக
மதப்பித்தம் சிதல்படவே
மாட்சியுடன் மேற்செலுத்தும்
காட்சியும் புகழரிதே!
என்றிவற்றால்
கூடி வருமோர் கோடுயர் புகழுச்சி
மோடியும் மக்கள் முன்னே
நாடிடும் அனைத்தும் நலமோ டுயர்கவே.
பதவி நிற்புறுதி == பதவிப் பிரமாணம் . விண் பயந்த - வானம் தந்த
நக்கத்திரம் - நட்சத்திரம் பல்லாற்றானும் - பல வழிகளிலும் .
தேயம் - நாடு. சிதல் - அழிவு.
என்றிவற்றால் , தனிச்சொல் . பழம் பாடல்களில் எனவாங்கு என்று வரும்.
கோடுயர் - மலை உயர்ந்த .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.