கந்தன் என்பது் தமிழில் முருகனைக் குறிக்கும் சொல்.
இதன் சங்கத வடிவம் "ஸ்கந்த" என்பது.
மலாய் மொழியில் "இஸ்கந்தர்" (Iskander ) என்பது , மன்னர்
பெயர்களில்வரும். எடுத்துக்காட்டு: "இஸ்கந்தர் ஷா" என்ற
மன்னர் (சுல்தான்) பெயர்.
இது ஒரு பெயராக மட்டுமே இப்போது பயன்படுவதாகத்
தெரிகிறது.
ஸ்கந்த : இஸ்கந்தர் ஒலிஒற்றுமை வெகு நன்றாகவே உள்ளது.
மலாய் மக்கள் தாங்கள் முஸ்லீம் ஆவதற்கு முன்னர் இந்துக்களாய் இருந்தனர். அப் பழ நாட்களில் இஸ்கந்தர் பெயர் அவர்களிடையே வழங்கியதற்கான ஆதாரம் கிட்டினால் அது சமஸ்கிருதத்திலிருந்து சென்ற சொல்லாய் ஏற்கலாம்.
இஸ்லாமிய வரலாற்றில் "இஸ்கந்தராமா" என்றொரு நூலில் மாவீரன் அலக்சாந்தரின் வரலாறு கூறப்படுகிறது. மலாய்க்காரர்கள் இஸ்லாமியத்தைத் தழுவிய பின்னர் அவர்கள் இப்பெயரை மேற்கொண்டிருப்பின் இது "ஸ்கந்த" என்ற சமஸ்கிருதச் சொல்லுடன் தொடர்பு அற்றதென்றே முடிவு செய்யவேண்டும்.
Note:
There is some numismatic evidence, in the form of ancient coins, to identify the Arabic epithet "Dhul-Qarnayn" with Alexander the Great. Some Muslim scholars do not support that the Koran referred to Alexander the Great by the name Dhul Qamayun.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.