A receptacle for misery....
இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்
குற்றம் மறைப்பான் உடம்பு.
குறள் 1029நாயனார் பெரிய குடும்பக்கலை வல்ல அரும்பெரியார். ஒரு குடும்பக்காரனுக்குத்தான் எத்தனை அல்லல்கள்? எதையெதையெல்லாம் அவன் சரிசெய்துகொண்டு இவ்வுலகில் வாழ்க்கையைத் தொடரவேண்டியுள்ளது?அக்குடும்பத்துக்கு ஒரு வீழ்ச்சி ஏற்பட்டுவிடக்கூடாது என்று கண்ணுங் கருத்துமாகச் செயல்படவேண்டி யுள்ளதே! அதனால், மன அழுத்தம் மிகுந்து, அவனுடலும் வெகுவாகப் பாதிக்கப்படும் நிலை உண்டாகிவிடுகிறதே!மன அழுத்தத்தின் காரணமாக, மாரடைப்புமுதல் புற்று நோய்வரை வந்த நோய்களேதும் மிகுவனவே தவிர , அவற்றுள் ஏதும் குறைந்து நலம்பெறுவதாய்க் காண முடியவில்லையே!குடும்பத்தைக் குற்றம் மறைப்பான் = குடும்பத்துக்கு ஏற்படும் இடர்களைச் சரிப்படுத்திக்கொள்ள முயன்று உழலும் அவன் ,உடம்பு இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ = துன்பங்களையே உள்வாங்கிச் சுமக்கும் பாத்திரமோ (அவன்) உடம்பு?இப்படி குடும்பத்தலைவன்பால் மனமிரங்கும் உள்ளம், நாயனாரின் உள்ளம்.துன்பம் வருங்கால் நகுக என்கிறாரே, துறவு பூண்டு ஓடிவிடு என்கிறாரோ!! மனம் இரங்கவும் செய்கிறார் அல்லவா?
453@15112010
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.