இந்தியப் பெருந்தேர்தல் --- கள்ளம்
இல்லாப் பொதுமக்கள்!---சொல்லால்
வந்து பொழிந்திடுவார் ;--- வேட்பர்
வயம்தமை இழந்திடுவர்.
எங்கும் நடப்பதுபோல் --- தருவார்
தம்முறுதி மொழிகள்--- களத்தில்
தங்கி உழைப்பவர்போல் --- தோன்றின்
வென்றி விளைப்பவரே!
தேர்தல் போனபின்னே --- சொன்னவை
தேற வில்லை யென்றால் --- அதுவும்
யார்தம் குற்றமையா --- அதுவே
தேர்தல் கலையல்லவோ!
மீண்டும் வேறொருவர் --- தம்மை
மேற்கொண்டு செல்வதன்றி --- ஞாலம்
யாண்டும் வேறுவழி ---- இல்லார்
யாது தலைப்படுவார்?
வேட்பர் == வேட்பாளர்.
சொல்லால் வந்து (உறுதிமொழிகளைப்) பொழிந்திடும் வேட்பாளர் வயம் தம்மை இழ ந்திடுவர் என்ற படி. சொல்லாடும் திறம் கூறியது.
வென்றி == வெற்றி.
மேற்கொண்டு - தேர்ந்தெடுத்து.
தலைப்படுவார்? = செய்ய இயலும் ? என்பது
இல்லாப் பொதுமக்கள்!---சொல்லால்
வந்து பொழிந்திடுவார் ;--- வேட்பர்
வயம்தமை இழந்திடுவர்.
எங்கும் நடப்பதுபோல் --- தருவார்
தம்முறுதி மொழிகள்--- களத்தில்
தங்கி உழைப்பவர்போல் --- தோன்றின்
வென்றி விளைப்பவரே!
தேர்தல் போனபின்னே --- சொன்னவை
தேற வில்லை யென்றால் --- அதுவும்
யார்தம் குற்றமையா --- அதுவே
தேர்தல் கலையல்லவோ!
மீண்டும் வேறொருவர் --- தம்மை
மேற்கொண்டு செல்வதன்றி --- ஞாலம்
யாண்டும் வேறுவழி ---- இல்லார்
யாது தலைப்படுவார்?
வேட்பர் == வேட்பாளர்.
சொல்லால் வந்து (உறுதிமொழிகளைப்) பொழிந்திடும் வேட்பாளர் வயம் தம்மை இழ ந்திடுவர் என்ற படி. சொல்லாடும் திறம் கூறியது.
வென்றி == வெற்றி.
மேற்கொண்டு - தேர்ந்தெடுத்து.
தலைப்படுவார்? = செய்ய இயலும் ? என்பது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.