நிதானம் என்ற சொல் மக்களிடையே பெரிதும் பயின்று வழங்குவதாகும்.
இதை வேறு சொல்லலால் குறிக்கலாமென்று "அமைதி " அல்லது அமைதி காத்தல் என்ற சொல்லால் / தொடரால் குறிப்பிடலாமென்றாலும் இவை நிதானம் என்பதற்குச் சமனாக நிற்பனவா என்ற கேள்வி எழக்கூடும்.
நிதானம் என்பதில் அவ்வளவு பொருண்மை உள்ளடங்கிக் கிடைக்கின்றதா என்று ஆய்வதற்கிது தூண்டுகின்றது;
நிதானம் எம்மொழிக்குரிய சொல் என்பதன்று நம் ஆய்வு.
முதலில் இச்சொல்லினுள் புகுந்து நோக்குவோம்.
நில் எனபது கடைக்குறைந்து நி என்று நிற்கின்றது.
அடுத்து வரும் சொல் "தானம் " எனற்பாலது,
இது தான்+ அம் என்ற சிறு சொற்கள் உள்ளிடப்பெற்றது.
பிறர் துள்ளினாலும் துடித்தாலும் ஓடினாலும் ஆடினாலும் பேரொலி கிளப்பினாலும் இன்னும் உள்ள நிலையைக் குலைக்க ஏதேது செய்தாலும் தான் நின்றபடி நிற்பது என்ற கருத்தை நி(ல்)+ தான் என்ற சொற்கள் காட்டுகின்றன.
இப்படிச் முறைமாற்றி இட்டுச் சொற்களைப் புனதலைப் பல இடுகைகளில் எடுத்துக்காட்டியுள்ளேன்.
அம் என்பதை ஓர் இடுகையில் விளக்கியுள்ளேன், அம் ஒரு விகுதி. அழகு என்றும் பொருள்.
நிதானம் = நி(ல்) + தான் + அம் = தான் + நில் + அம் = "தான் நிற்றல் அழகு" அதாவது பிறர் துள்ளினால் துள்ளட்டும்.
இதுவே நிதானம் பிறந்த கதை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.