மனிதனாய்ப் பிறந்துவிட்டால்
மண்டிவரும் குறைகளுக்கோ
பஞ்சமில்லை;
தனியளாய் உந்துதனைத்
தகச்செலுத்திச் சோலிகளை
முடிக்கவேண்டி
இனியவா னொலிப்பாடல்
இதமாகக் கேட்டபடி
ஏகுங்காலை
கனிவிழைந்த வாயிலொரு
காய்வந்து திணிந்ததுபோல்
விபத்து நேரும்!
நேர்ந்துவிட்ட விபத்தினைச்ச
மாளிக்க ஒருதிறமை
வேண்டும்வேண்டும்!
ஊர்ந்துவந்த வீதியில்கைப்
பேசிகளில் படமெடுப்பார்
நடிகை யாமே !
பேர்ந்துவிடும் முகரை எனப்
பேச்சிலொரு மிரட்டலினை
விடுப்பார் கேட்டுச்
சோர்ந்துவிட நேர்ந்துவிட்டால்
சோமனருள் அன்றியொரு
காவலுண்டோ?
---- சிவமாலா
பாடலில் வரும் பதங்களுக்கு விளக்கம் .
குறைகள் : கோபம், தேவையற்ற வாய்ப்பேச்சு, அச்சம், ஆயுதமெடுத்தல்
போன்ற குறைகள் . உந்து - (கார்), தக - நன்றாக; செலுத்தி- வண்டியை ஓட்டி ; நடிகை யாமே - யாம் அங்கு விபத்தில் மாட்டிக்கொண்டால், எ ம்மைப் பட மெடுப்பவர்கள் camera crew ; I then become the actress! ! யாமே நடிகையானோம் என்றபடி.
நீங்கள் படித்தின்புற சாலையில் நடப்பவை பற்றிய ஒரு கட்டுரை:
(விபத்து ஒன்றும் நேர்ந்துவிட வில்லை; சிங்கப்பூரில் மட்டுமன்று, எங்கும் நடப்பதுதானே, ஓட்டுநரும் பயணிகளும் சாலையில் சற்று நிதானம் கடைப்பிடிக்கவேண்டும்.... அந்த நாள் வரவேண்டும். )
மண்டிவரும் குறைகளுக்கோ
பஞ்சமில்லை;
தனியளாய் உந்துதனைத்
தகச்செலுத்திச் சோலிகளை
முடிக்கவேண்டி
இனியவா னொலிப்பாடல்
இதமாகக் கேட்டபடி
ஏகுங்காலை
கனிவிழைந்த வாயிலொரு
காய்வந்து திணிந்ததுபோல்
விபத்து நேரும்!
மாளிக்க ஒருதிறமை
வேண்டும்வேண்டும்!
ஊர்ந்துவந்த வீதியில்கைப்
பேசிகளில் படமெடுப்பார்
நடிகை யாமே !
பேர்ந்துவிடும் முகரை எனப்
பேச்சிலொரு மிரட்டலினை
விடுப்பார் கேட்டுச்
சோர்ந்துவிட நேர்ந்துவிட்டால்
சோமனருள் அன்றியொரு
காவலுண்டோ?
---- சிவமாலா
பாடலில் வரும் பதங்களுக்கு விளக்கம் .
குறைகள் : கோபம், தேவையற்ற வாய்ப்பேச்சு, அச்சம், ஆயுதமெடுத்தல்
போன்ற குறைகள் . உந்து - (கார்), தக - நன்றாக; செலுத்தி- வண்டியை ஓட்டி ; நடிகை யாமே - யாம் அங்கு விபத்தில் மாட்டிக்கொண்டால், எ ம்மைப் பட மெடுப்பவர்கள் camera crew ; I then become the actress! ! யாமே நடிகையானோம் என்றபடி.
நீங்கள் படித்தின்புற சாலையில் நடப்பவை பற்றிய ஒரு கட்டுரை:
Anger, Social Media and Singaporeans
http://theindependent.sg/anger-social-media-and-singaporeans/(விபத்து ஒன்றும் நேர்ந்துவிட வில்லை; சிங்கப்பூரில் மட்டுமன்று, எங்கும் நடப்பதுதானே, ஓட்டுநரும் பயணிகளும் சாலையில் சற்று நிதானம் கடைப்பிடிக்கவேண்டும்.... அந்த நாள் வரவேண்டும். )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.