பண்டமாற்றுக் காலத்திலிருந்தே பொருளைப் பேரம்பேசி வாங்குவதென்பதே மனநிறைவு அளிக்கத் தக்க நடவடிக்கையாக இருந்திருப்பது தெரிகிறது. பேரம் பேசாமல் வாங்கிவந்த பொருளை நம் தோழியர்களில் ஒருத்தி பார்த்து, குறைத்துக் கேட்கவில்லையா விலை அதிகம்போல் தோன்றுகிறதே என்றால், நாம் ஏமாந்துவிட்டதுபோன்ற உணர்வன்றோ மேலிடுகின்றது? பேரம்பேசி வாங்குவதே செம்மையான முறை என்று பலர் கருதுவர். செம்மை 1,நேர்மைக்கு உரிய வழி, 2. சிவப்பு என்று இரு பொருளுண்டு. பேரம் இல்லையென்றால் அது கருப்பு, இருட்டுடன் தொடர்புடைய வணிக வழி.........! - என்று நினைத்தனர் .
கரு > கருப்பு.
கறு > கறுப்பு.
கரு > கரார் . (கரு+ஆர் )
கறு > கறார் . (கறு+ ஆர் )
ஆர் ஈறு பெற்ற சொற்கள் .
கரார் விலை = வரையறவு செய்யப்பட்ட விலை.
கரு > கருப்பு.
கறு > கறுப்பு.
கரு > கரார் . (கரு+ஆர் )
கறு > கறார் . (கறு+ ஆர் )
ஆர் ஈறு பெற்ற சொற்கள் .
கரார் விலை = வரையறவு செய்யப்பட்ட விலை.
கருப்பு கறுப்பு என்று இருவகையிலும் சொல்லமைதல் போல் கரார்
கறார் என்று அமைந்துள்ளன .
வாங்குபவன் பேசி விலையை நிறுவிக்கொள்ள வழியில்லையென்ால் நிலைமை கருப்பு நிறம்தான்!
வேண்டலும் வழங்கலுமே (demand and supply) விலையை நிறுவும் என்பது இற்றைப் பொருளியல் கொள்கை. நம் சொற்கள் பழைய உலகின் கண்ணாடிகள்.
இவை சந்தைச் சொற்கள்.
Ms Sivamala,
பதிலளிநீக்குDue to many reasons I could not study Tamil, even though it is my mother language. Seeing the beauty and facility of the language and its undoubted sweetness, it is a lapse that is regrettable. I read Tamil like a preschooler, but I know some works by heart eg Abhirami Anthathi, kandar anubhuti- not memorized but can read fluently. My sorrow is that I can't understand them, which seems such a pity.
--
salutations to your work even though I don't follow I love to read.