தமிழில் தலையிழந்த சொற்கள் பல. "நிரம்ப" என்பது "ரொம்ப" ஆனது ஓர் எடுத்துக்காட்டு, இதில் நாம் கவனித்துக்கொள்ள வேண்டியது நிறைதல், நிரம்புதல் என்ற சொற்களின் பொருள் ஒன்றுபாடும் நிறை <> நிர என்பவற்றின் ஒலி அணிமையும் (proximity in sound) ஆகும்.
இப்போது "ரொக்கம் " என்பதை ஆராய்வோம்.
ரொக்கம் என்பதில் உள்ள இரண்டாம் சொல்லை முதலில் எடுத்துகொள்வோம் .
ஒக்குதல் என்பதன் பொருள்களில் ஒன்று, ஒதுக்கி வைத்தல் என்பதாம். ஒக்குதல் என்பதுகூட ஒதுக்குதல் என்பதிலுள்ள துகரம் மறைந்த சொல் என்று கொள்வதும் இழுக்காது. ("இடைக்குறை" ) .
சிறு சிறு தொகைகளைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து வைத்துப் பின் ஒன்றாக எடுக்கும்போது அதுவே "ரொக்கம்" ஆகிறது. அதை ஒருத்தியிடம் கொடுத்து "ரொக்கம் " கொடுத்தேன் எனில் அது பொருந்துகிறது. சிறுசிறு தொகைகளாக இல்லாமல் ஒரே தடவையில் மொத்தமாக என்று பொருள்.
இதுவே அதன் தொடக்க காலச் சொல்லமைப்புப் பொருளென்றாலும் இன்று அது காஷ் (cash or cash-in-hand) என்ற ஆங்கிலச்சொல்லுக்கு ஈடாக நிற்கின்றது. இன்று காசோலையாய் இல்லாமல் "பணமாக" எ ன்றன்றோ பொருள் தருகிறது! (NOT BY CHEQUE OR ATM ELECTRONIC TRANSFER OR GIRO DEDUCTION).
இனி "உரு" என்ற முன் நிற்கும் சொல்லை அறிந்துகொள்வோம். உருத்தல் எனின் முன் தோன்றுதல். ஒதுக்கி வைத்த மொத்தமும் உங்கள் முன் இப்போது தோன்றிவிட்டது ! அதுவே உரு+ஒக்கம் = உரொக்கம் > ரொக்கம் என்பதாகும்.
இந்தச் சொல்லின் பொருளை ஒரு வாக்கியத்தில் எழுதுவதானால், "ஒதுக்கி வைத்த மொத்தமும் உங்களின் முன் ஒன்றாகத் தோன்றிவிட்டது " என்று எழுத வேண்டும். எந்தப் பணமானாலும் எங்காவது ஒதுக்கமாக (பைக்குள்) வைத்திருந்துதானே உங்கள்முன் காட்டுகிறார்கள்.
நிதி பற்றிய கலை முன்னேற முன்னேறச் சொற்பொருளானது சில சாயல்களில் வேறுபடும். சொல்லின் அமைப்புப் பொருள் அதன் இற்றைப் புழக்கப் பொருளினின்று வேறுபடும் என்பதுணர்க.
குறிப்புகள் :
ஒதுக்குதல் > ஒ(து)க்குதல் - ஒக்குதல். "து" இடைக் குறைந்தது ( ஒத்தல் being equal என்பது வேறு .)
உருத்தல் : "ஊழ்வினை உருத்து வந்தூட்டும் என்பதும்" - சிலப்பதிகாரம்.
சொல்லாக்கத்தில் உடம்படு மெய் வராமலும் சொல் அமையும் . எ-டு : ,மகன் மகள் என்பவற்றுக்கு சின்னாட்களுக்கு முன் கீழே தரப்பட்ட விளக்கம் கா்ண் க ஆகவே உரு + ஒக்கம் = உருவொக்கம் என்று அமையவில்லை. இது புலவர்புனைவு ச் சொல் அன்ெற ன்பதும் ஒரு காரணமாகலாம் போலும் . ஒக்கம் என்பது இப்போது பேச்சு வழக்கில் இல்லை என்று நினைக்கிறேன் .
பிற+அன் = பிறன் , இதில் பிறவன் என்று வகர உடம்படு மெய் வந்திலது கா ்ண்க

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.