Pages

சனி, 28 செப்டம்பர், 2013

Many beautiful poems in Tamiz..

எத்தனை எத்தனை இன்கவிகள்
என்னை வாசியென் றோடிவந்தே
ஒட்டிக் கொள்வன இதழ்களிலே‍‍‍............................
அவற்றை
ஒத்திக் கொள் வேன் நெஞ்சகத்தில்.

எண்ணி இருக்கையில் மணிப்பொறியின்
சின்ன முள்ளும் பெரிதினைப்போல்
தின்னும் முடிக்கும் நேரத்தினை!
பின்னும் இமைகள் உறக்கத்தினால்.

கவிமணி தேசிக வினாயகனார்
கவியை எழுத விழைந்ததுண்டு!
குவியும் பற்பல சோலிகளால்
 அவிய‌ ஒழிந்தன நாட்கள்பல.


வானொடு கொஞ்சும் வண்ண நிலா
வாய்த்த இரவினை வளர்த்திடுமேல்
தேனொடு குலவும் தெளிகவியைத்
தேடிப் பாடிடத் திகட்டிடுமோ?


எழுத = பல சுவைக் கவிதைகள் என்னும் திரியில் பதிய அல்லது இட.
மணிப்பொறி  = ‍  கடிகாரம்,   அவிய‌ -- பயனின்றி,  ஒழிந்தன--- ‍சென்றுவிட்டன. வளர்த்திடுமேல் -  நீளச்செய்யுமானால்.

புதன், 25 செப்டம்பர், 2013

மனோன்மணீயம் சுந்தரனார் பாடலுக்கு விளக்கம்

continued from a post on 23.09.13

மனோன்மணீயம்  சுந்தரனார் பாடலுக்கு விளக்கம் இங்கு தொடர்கிறது,

இப்போது  வருபொருள் உரைக்கும் வல்லபம் என்பதனைப் பார்ப்போம். ஆங்கிலத்தில் prophecy என்பதற்கு நேரான பொருளையே ஆசிரியர் வருபொருளுரைத்தல் என்று குறிக்கிறார். தமிழில், வரவுரைஞர், முற்றறிஞர் என்று குறிக்கலாம்.தீர்க்கதரிசி :  தீர்க்கமாக (தீர்மானமாகவும் முடிவாகவும்) யாவற்றையும் தெரிந்த இறைப்பற்றாளர். தீர்க்கம் ‍:  தீர அறிதலைக் குறிக்கின்றது. தரிசி ‍ : தெரிந்தவர். (தெரி+சி ). தீர்தல், இங்கு தீர்ந்தது எதுவெனில் ஐயப்பாடு தீர்ந்தது.

வல்லபம் ‍: வல்லவம், திறன். ஒன்றைச் செய்யமுடிந்த நிலை.

இத்தகு வரவுரை திறனைப்  பெற்றிருந்தால்தான் என்ன?  ‍என்கின்றார் ஆசிரியர்.


மண்ணிடை விண்ணிடை மறைந்த
பெரு ரகசியங்கள் யாவையும் உணரும்
பெருமையும் ஞானமும்பெறிலென்;

மண்ணிடை விண்ணிடை = மண்ணிலும் விண்ணிலும், அதாவது இவ்வுலகில் எங்கும் எதிலும்; மறைந்த =  நாம் அல்லது யாரும் அறியாமல் மறைவாக உள்ள;  பெரு ரகசியங்கள் யாவையும்= உணரவேண்டிய உள்ளுறைவுகள் எல்லாவற்றையும்; உணரும் பெருமையும் ஞானமும் = மனத்திலறியும் தகுதியும் தான் யார், உலகு எத்தகையது, இறைவன் யார் என்னும் அறிவும்; பெற்றால்தான் என்ன?

இரகசியம் என்பது, முதற்கண் அகத்தில் இருந்து வெளிப்படாததையே குறிக்க எழுந்த புனைசொல் ஆகும். இச்சொல்லில் முதல் மூன்றெழுத்துக்கள் "இரக" என்பது இரு+அகம் என்று பிரியும். நெஞ்சுக்குள்ளே இருந்து இன்னதென்று வெளியில் பிறர் அறியாத நிலை ஆகும். இரக(ம்)+ சி+அம், இங்கு சி,அம் என்பன விகுதிகள். இரகசியம் என்ற சொல்லின் இரகசியம் அதுதான். அறிந்து
இன்புறுங்கள்.

யார் மனத்திலும் இல்லாமல் யாருக்கும் புரியாமல் இருப்பது கூட ஒருவகையில் இரகசியம்தான். மனிதனின் அகத்தில் இல்லாமல் இருக்கலாம். ஒரு பொருளில் உள்ளுறைந்து கிடக்கலாம். அப்பொருளில் உள் என்பது அதன் அகமாகும். ஏவுகணை பாய்ச்சுதற்கான அறிவியல் ஆற்றலின் விதிகள் உலகம் தோன்றியது முதலே அவ்வப் பொருள்களில் அமைந்து கிடந்தாலும் அவற்றை இப்போதுதான் கண்டுபிடித்துப் பயன்பாடு காண்கிறோம். கண்டுபிடிக்கப்படும்வரை அவை உள்ளுறைவுகளாக இருந்தன.

பருவதம் எடுத்துப் பந்தென ஆடும்
பத்தியும் சித்தியும் பெறிலென்
பரவனுகூல திருட்டியென் றுரைக்கும்
பண்புறும் அன்பிலை எனிலே

பருவதம் :  மலை. பருவதம் எடுத்துப் பந்தென ஆடும் ‍  :   உலகை ஆட்டிப் படைக்கும்;  பத்தி  :  இறைப்பற்று.  சித்தி : தவ வலிமையால் அல்லது இறைப்பற்றாண்மையால் பெற்ற இயல்பு கடந்த ஆற்றல்கள். பரவனுகூல திருட்டி:  எங்கும் எதிலும் நன்மையே காண்பது.

எனவே அன்பு இல்லையெனில் மற்ற பேறுகளால் பயனொன்றும் இல்லை என்கிறது பாடல். அன்பு வேண்டும், அதில் பண்பும் கலந்திருக்க வேண்டும்  என்பதை அழுத்தமாகச் சொல்வது "அன்புறும் பண்பு"  என்னும் சொல்லாட்சி. ‍


0-0.0-0

.

தெரிசனம்


Ref: post entitled "root word "ther" " :   http://www.blogger.com/blogger.g?blogID=7941642520803533372#editor/target=post;postID=5864195661364


"(தெர்)" என்ற அடிச்சொல்லைப் பற்றி, முன் இடுகையில் கண்டோம்.

இங்கு தெரி என்ற முதனிலையடியாய்ப் பிறந்த ஒரு சொல்லைச் சற்று பார்ப்போம்.

தெரி >( தெரிசு.)

ஒப்பு நோக்குக:  பரி >  பரிசு.    வினைச்சொல்: பரிதல்

(தெரிசு )+ அன் +  அம் =  தெரிசனம்.

இச்சொல்லில் சு,அன், அம் என்னும் மூன்று விகுதிகள்  சேர்க்கப்பட்டுள்ளன.

இது பின் தரிசனம் என்று திரிந்தது.

செவ்வாய், 24 செப்டம்பர், 2013

root word "ther"


(தெர் ) > தெருள்


(தெர் ) > தெருள் > தெருட்டு > தெருட்டுதல்.


(தெர்)) > தெருள் > (தெருட்டி) > திருட்டி. > திட்டி.


திட்டி சுற்றிப் போடுதல், கண்திருட்டி. 


"Ther" (தெர்)) is the root word.


Words which have gone out of existence in the process of evolution of language are usually shown in brackets.



தமிழில் சொற்கள் (முதனிலை அல்லது பகுதிகள்) ஒற்றைக் குறிலடுத்து ரகர ஒற்றுடன் இயல்வதில்லை, இடைச்சொற்கள் தவிர. ஆயினும் தெளிவின் பொருட்டு இங்கு "தெர்" என்றே காட்டப்பெற்றிருக்கிறது. இறுதியில் உகரம் நின்று "தெரு" எனத் தரப்படின் அவ்வடிவிலான வேறு சொல்லுடன் மயங்குமாதலின்.




some rarely used words from "theri"

தெரி என்ற சொல்லினின்று தோன்றிய சில அருஞ்சொற்களை அறிந்துகொள்ளுதல் ஈண்டு பொருத்தமாக இருக்கும்,

தெரிகவி : இது பொறுக்கி எடுக்கப்பட்ட கவி அல்லது கவிதைத் தொகுதியைக் குறிக்கிறது.       

selected poem or anthology of selected poems
தெரிக்கல் : விவரமாகத் தெரிவித்தல் என்று பொருள்.


தெரிமா = அரிமா ( சிங்கம் ).    


தெரிநிலை - clearly indicated , highlighted state    (   The opposite of something latent, hidden, or not apparent)     .(


தெரிகடை *= குப்பை கூளம், கைவிடப்பட்டது  * 

தெரிசொற்கள் * - glossary.



*சாக்கடை என்ற சொல்லிலும் "கடை" என்ற இறுதி உள்ளது. சாய்க்கடை > சாக்கடை.  வீட்டின் கடைசிப் பகுதியில் இருப்பதாலும் அடிப்பகுதி நீர் வடியும் பொருட்டுச் சாய்வாகச் செல்வதாலும் பொருத்தமான சொல்லமைபு ஆகும்.
வீட்டின் முன்பக்கம் இப்போது அமைக்கப்படுவது, சொற்பிறப்புக்குப் பிந்திய‌
ஏற்பாடு. வீதியின் இரு மருங்கிலும் உள்ள சாக்கடைக்கும் பொருத்தமான சொல்லே ஆகும்,





திங்கள், 23 செப்டம்பர், 2013

மனோன்மணீயம் சுந்தரனாரின் பாடல்.

வருபொருள் உரைக்கும் வல்லபம் பெறில் என்?
மண்ணிடை விண்ணிடை மறைந்த
பெரு ரகசியங்கள் யாவையும் உணரும்
பெருமையும் ஞானமும்பெறிலென்;
பருவதம் எடுத்துப் பந்தென ஆடும்
பத்தியும் சித்தியும் பெறிலென்
பரவனுகூல  திருட்டியென் றுரைக்கும்
பண்புறும் அன்பிலை எனிலே.

இது மனோன்மணீயம் சுந்தரனாரின் பாடல். அன்பின் அகநிலை அல்லது அறவுள்ளம் என்ற தலைப்பில் வெளியிடப் பட்ட  கவிதைகளில் இரண்டாம் பாடல். அன்பின் முதன்மையை வலியுறுத்துவதாகும்.

Continued in post dated 26.09.13

புதன், 18 செப்டம்பர், 2013

INFORMATION FOR MY READERS FROM SIVAMALA

Dear valued friends

Some of my old posts were written in TSC2 fonts.  They cannot be read if you are currently using unicode fonts.  They will look gibberish.  The blog software does not allow me to change them to unicode. Perhaps they are in a server disc which does not favour changes. When I try to change it says:   
An error occurred while trying to save or publish your post. Please try again. After trying a few times,I have given up   ( for the time being).  Whilst I will keep this in view and go back to make changes, you may use the PONGGU Thamiz  (பொங்கு தமிழ்  எழுத்துரு  மாற்றி )  converter  சுரதா யாழ்வாணன்'s contribution )   to read them. You may also use another software FREE CODE and try. 

My apologies for this situation.

Current posts are all in unicode.

Thank you for your patience.

amman pAttu "கருணை தெய்வமே கற்பகமே"


இராகம்:  சிந்து பைரவி , தாளம் :  ஆதி

கருணை தெய்வமே கற்பகமே
காண வேண்டும் உன் தன் பொற்பதமே (என் கருணை)

உறுதுணையாக என் உள்ளத்தில் அமர்ந்தாய்
உனையன்றி வேறே யாரோ என் தாய் (கருணை)

ஆனந்த வாழ்வே   அளித்திடல் வேண்டும்
அன்னையே என் மேல் இரங்கிடல் வேண்டும்
நாளும் உன்னைத்  தொழுதிடல் வேண்டும்
நலமுடன் வாழ அருளல் வேண்டும் (கருணை)

This is an old song usually sung in amman festivals. Author மதுரை ஸ்ரீனிவாசன்


செவ்வாய், 17 செப்டம்பர், 2013

பெண்ணுரிமை




காமுகர் தம்மையே தூக்கிலிட்டால் --- அவர்
காலடி போற்றிப்பின் செல்பவரும்
தோமுறு பாதை  தவிர்த்திடுவார்  --- அதன்
தொல்லை விலங்கை அவிழ்தெறிவார்.

என்றிங் கறிந்தோர் செயல்படினும் --- சிலர்
இயலா ததுவென் றயர்வுறுவார்!
ஒன்றும் செயாமல் இருந்துவிட்டால்--- பெண்டிர்
உலவத் தடையாய்  அமைந்துவிடும்.

குற்றச் செயல்கள் எதுவுமில்லா---- ஒரு
குதூகல ஞாலமோ எங்குமில்லை!
பெற்று வளர்க்கும் குழந்தைகளில்--- சிலர்
பின்னர் நெறியே திறம்பிடுவர்.


அழுகும் பழத்தை அகற்றுவது --- உள்ள
அழகிய நற்பழம் காத்திடவே.
முழுகும் படகில்  பயணித்திடல் --- குற்றம்
இழைப்பவர் தம்மோ டிசைந்திருத்தல்.



புனித மகளிர் கெடுத்தார்க்கு வேண்டாம்
மனித உரிமைக் கொடை.



புனித மகண்மை பொடித்தார்க்கு வேண்டாம்
மனித உரிமைக் குடை.



Notes:

முழுகும் = sinking. 
மூழ்குதல் = முழுகுதல்.. the latter word also means bathing. 
மூழ்குதல் used in written language to denote sinking.

தோமுறு - தோம் உறு - குற்றம் உள்ள.

திறம்பிடுவர் : tiRampu-tal 1. to change; to be over-turned; to be subverted; 2. to sprain; to swerve from, deviate from

பொடித்தல் -  spoil.

மகண்மை =  பெண்மை